SELANGOR

மந்திரி பெசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய காஜாங் நகராண்மை கழகத்தைப் பாராட்டினார்

காஜாங், ஜூலை 18:

நகராண்மை கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிட்டு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வரும்  காஜாங் நகராண்மை கழகத்தை (எம்பிகெஜே) மற்ற ஊராட்சி மன்றங்கள் முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். போட்டியிடும் திறன் மற்றும் சிறந்த நிர்வாகம் கொண்ட காஜாங் நகராண்மை கழகம் மிகச்சிறந்த நகரமாக உருவெடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

”  ஒரு சிறிய நகரமாக இருந்த காஜாங், இன்று 20 ஆண்டுகளுக்கு பிறகு எம்பிகெஜெவின் தொடர்ச்சியான முயற்சியினால் பல்வேறு வழிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் காஜாங் நகராண்மை கழகம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் நகராட்சி திட்டங்களை செம்மையாக நிறைவேற்றி வருகிறது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

mpkj

 

 

 

 

 

 

இதற்கு முன்பு, பல்வேறு வசதிகள் மற்றும் உள்ளூர் மேம்பாடுகள் காஜாங் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இங்குள்ள பொது மக்கள் நன்மைகளை அடைந்து வருகின்றனர் என்று கூறினால் மிகையாகாது.

மாநில அரசாங்கத்தின் நிதி மூலமாக 10 பொது மண்டபங்கள் கப்பட்டுள்ளது என்று அஸ்மின் அலி கூறினார். இதனிடையே, மாநில மந்திரி பெசாரின் பாராட்டுதலை கண்டு மெய்சிலிர்த்த காஜாங் நகராண்மை கழகத் தலைவர் முகமட் சாயூதி பாக்கார், இதை ஒரு ஊக்குவிப்பாக கருதிக் கொண்டு மேலும் சிறந்த முறையில் சேவை ஆற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

#கேஜிஎஸ்


Pengarang :