SELANGOR

பொது மக்களின் வசதிகளுக்காக பொதுப்பணித்துறை ஒதுக்கீடு ரிம400 மில்லியனாக அதிகரிக்கப் பட்டுள்ளது

காஜாங், ஜூலை 18:

மாநில அரசாங்கம் பொது வசதிகள் மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகாகளுக்கு சென்று சேர்வதில் உறுதியாக இருக்கும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார். சிலாங்கூர் பொதுப்பணித்துறை மற்றும் சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் இலாகா ஆகியவற்றின் மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

”   கடந்த 2016-இல் மாநில அரசாங்கம் பொதுப்பணித்துறைக்கு ரிம 373 மில்லியன் ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு ரிம 400 மில்லியனாக அதிகரித்து பொது மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இந்நிதி உதவியாக இருக்கும். பொதுப்பணித்துறைக்கான உயர்ந்த நிதி ஒதுக்கீடு பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருக்கும்,” என்று பண்டார் பாரு பாங்கி-காஜாங் 2-பண்டார் டெக்னாலஜி காஜாங் அடுக்குமாடி சந்திப்பு திறப்புவிழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :