SELANGOR

இந்த ஆண்டு இறுதிக்குள் 100 இலவச பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இலக்கு

கிள்ளான், ஜூலை 18:

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 11 ஊராட்சி மன்றங்களின் வழி, 98 ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து இயங்கி வருகிறது என்று சிலாங்கூர் மாநில முதலீடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்  மற்றும் வாணிப மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். ரிம 20 மில்லியன் ஒதுக்கீட்டில் 46 பேருந்துகள் மற்றும் 16 புதிய வழித்தடங்கள் கொண்டு தற்போது சிலாங்கூர் முழுவதும் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை இயங்கி வருகிறது என்றால் மிகையாகாது.

”    இந்த ஆண்டு இறுதிக்குள் 100 இலவச பேருந்துகளை அறிமுகப்படுத்தி, சாதனையை யாரும் முறியடிக்க முடியாமல் செய்ய வேண்டும். 100 இலவச பேருந்துகளை அறிமுகப்படுத்தி உலக சாதனை படைக்க வேண்டும். அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டில் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அதிகமாக கொடுத்தால் மேலும் இலவச பேருந்துகள் அதிகரிக்கலாம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

BAS MPK (1)

 

 

 

 

 

கிள்ளான் நகராண்மை கழகத்தின் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்கு பிறகு   செய்தியாளர்களிடம் பேசினார். அடுத்து ஐந்து ஊராட்சி மன்றங்கள் இரண்டு புதிய வழித்தடங்களை பெறவிருக்கின்றன. ஷா ஆலம் மாநகராட்சி மன்றம், சுபாங் ஜெயா நகராண்மை கழகம், அம்பாங் ஜெயா நகராண்மை கழகம், காஜாங் நகராண்மை கழகம் மற்றும் செப்பாங் நகராண்மை கழகம் ஆகிய ஐந்து ஊராட்சி மன்றங்களே இரண்டு புதிய வழித்தடங்களோடு செயல்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிள்ளான் நகராண்மை கழகத்தை தவிர ஒரு புதிய வழித்தடம் பெறவிருக்கும் ஊராட்சி மன்றங்கள்; செலாயாங் நகராண்மை கழகம், கோலா லங்காட் மாவட்ட மன்றம், உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம், சபாக் பெர்னாம் மாவட்ட மன்றம் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் போன்றவை ஆகும்.

இதனிடையே எம்பிஎஸ்ஏ மற்றும் எம்பிஎஸ்பி தலா எட்டு புதிய பேருந்துகளை பெற்றுள்ளது. மேலும் எம்பிஏஜே (7), எம்பிஎஸ் (6), எம்பிஎஸ்ஜே, எம்பிகே மற்றும் எம்பிகேஜே ஆகிய ஊராட்சி மன்றங்கள் தலா நான்கு பேருந்துகள், எம்டிகெஎஸ் (2), மற்றும் எம்டிகெஎல், எம்டிஎச்எஸ், எம்டிஎஸ்பி தலா ஒரு பேருந்து கூடுதலாக பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :