SELANGOR

மாநில அரசாங்கம் தையல் இயந்திரங்கள் வழங்கியது

செப்பாங், ஜூலை 19:

வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க திட்டத்தின் வழி 13 இந்தியர்களுக்கு மாநில அரசு தையல் இயந்திரம் வழங்கியது. சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவு மிக்க மக்கள் நலத்திட்டத்தின் ஒரு அங்கமான சிறுத்தொழில் வியபார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிப்பாங் மாவட்டத்தில் 13 இந்திய சிறுத்தொழில் வர்த்தகர்களுக்கு மாநில அரசாங்கம் தையல் இயந்திரம் வழங்கியது.

தேர்வு செய்யப்பட்ட 13 இந்தியர்களுக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான மாண்புமிகு கணபதி ராவ் மற்றும் மாண்புமிகு அமிருடின் ஷாரி ஆகியோர் எடுத்து வழங்கினார்கள்.இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 52 பேரில் 13 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் கீழ் இயங்கும்  சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கிய இவ்வுதவி காலத்திற்கு ஏற்றது என கூறிய உதவியை பெற்றுக் கொண்டவர்கள் மாநில அரசாங்கத்திற்கு தங்களின் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

#கேஜிஎஸ்


Pengarang :