NATIONAL

தவறாக பயன்படுத்தப்பட்ட 1எம்டிபி பணம், பாக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் திரும்ப கொண்டு வரப்படும்

கோலா கங்சார், ஜூலை 22:

1 மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) மூலம் வாங்கப்பட்ட சொத்துடமைகள் 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்றதும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யும் என்று கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்லா சொத்துடமைகளும் மற்றும் ரிம 117 மில்லியன் விலை கொண்ட வைரத்தையும் ஏலம்விடப்பட்டு மக்களுக்கு திருப்பிக் கொண்டு வரப்படும் என்று பலத்த கரவொலியிடையே கூறினார்.

”  பாக்காத்தான் ஆட்சியை எடுத்த பிறகு, வைர மோதிரத்தை கைப்பற்றி ஏலத்தின் மூலம் மக்களுக்கு பணம் திரும்பி ஒப்படைக்கப் படும்,” என்று கோத்தா லாமா கானான் பாலத்தில் நடந்த நோன்பு பெருநாள் பேராக் பயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார்.

மேலும் கூறுகையில், பிரதமரின் மனைவியான ரோஸ்மா மன்சோர், ஆஸ்திரேலியா மாடல் அழகி மிரண்டா கேரை பின்பற்ற வேண்டும். ஜோ லோ 1எம்டிபி பணத்தில் வாங்கியதாக கூறப்பட்ட ஆபரணங்களை மிராண்டா திருப்பிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

=EZY=


Pengarang :