SELANGOR

பிளாஸ்டிக் பை 20 சென் விற்பனையில் ரிம1.87 மில்லியன் வசூலிக்கப் பட்டது

ஷா ஆலம், ஜூலை 24:

சிலாங்கூர் மாநிலத்தில் 20 சென் பிளாஸ்டிக் பை விற்பனையில் மொத்தம் ரிம 1.87 மில்லியன் வசூல் செய்யப்பட்டது என்று மாநில சுற்றுலா, சுற்றுச் சூழல், பசுமையான தொழில்நுட்பம் மற்றும் பயனீட்டாளர் நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் எலிசபெத் வோங் கூறினார். கடந்த மே மாதம் வரை பிளாஸ்டிக் பை விற்பனையில் மாநில அரசாங்கத்திடம் அறிக்கை வெளியிட்ட நிறுவனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எண்ணிக்கை இது என எலிசபெத் வோங் கூறினார்.

”  மே மாதம் வரை ரிம 1,871,547.55 பயனீட்டாளர்கள் பிளாஸ்டிக் பை வாங்க கட்டணமாக செலுத்தி உள்ளனர். பேரங்காடிகள் 63.98% வசூல் செய்த நிலையில் உணவகங்கள் 36.03% வசூல் செய்தது தெரியவந்துள்ளது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

bebas-plastik


Pengarang :