NATIONAL

அம்னோ இளைஞர் அணியினர் கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும்

கோலா லம்பூர், ஜூலை 27:

அம்னோவின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், அம்னோ இளைஞர் பிரிவினரை முதிர்ச்சியான சிந்தனை மற்றும் திறந்த மனதுடன் நடந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பிரிபூமி பெர்சத்து கட்சியின் இளைஞர் அணி ‘நத்திங் டூ ஹைட் 2.0’ விவாததிற்கு பிரதமர் மற்றும் அம்னோ தலைவரை அழைப்பு விடுக்க புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில் வந்த போது அம்னோ இளைஞர் பிரிவினர் குண்டர் கும்பல் போல் நடந்து கொண்டதை மேற்கோள்காட்டி டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.

”   இளைஞர் பிரிவு எதிர் காலத்தில் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். திறந்த மனதுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த சவாலையும் இளைஞர்கள் எதிர் கொள்ள வேண்டும். இந்த வேளையில் பெர்சத்து கட்சியின் இளைஞர் அணியினரை நடவடிக்கையில் நான் பெருமிதம் கொள்கிறேன். இப்படி பட்ட சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. அழைப்பு கடிதத்தை கொடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும். இது ஒரு மிரட்டல் அல்ல, மாறாக அம்னோ இளைஞர் பிரிவினர் சற்று நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்,” என்று பிரிபூமி பெர்சத்து கட்சியின் தேசிய தலைவருமான முஹிடின் யாசின் தெரிவித்தார்.

நேற்று மாலை 3 மணி அளவில் புத்ரா அனைத்துலக வாணிப மையத்தின் முன்பு அர்மாடா என்று அழைக்கப்படும் பெர்சத்து கட்சியின் இளைஞர் அணியின் மத்திய செயலவை உறுப்பினர் ஹாஸ்ராப் முஸ்தாக்கிம் அழைப்பு கடிதத்தை கொடுக்க முற்பட்ட போது அம்னோ இளைஞர் பிரிவின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஹார்மான் ஹாஸா தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆனாலும் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :