NATIONAL

எஸ்பிஆர்எம், சரவாக்கில் பெல்டா கோப்ரேஷன் நிறுவனத்தின் தங்கும் விடுதியை விசாரணை

ஷா ஆலம், ஜூலை 27:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  (எஸ்பிஆர்எம்) பெல்டா நிறுவனத்தின் துணை நிறுவனமான பெல்டா இன்வெஸ்ட்மெண்ட் கோப்ரேஷன் நிறுவனம் வாங்கியதாக கூறப்படும் தங்கும் விடுதியை விசாரணை நடத்தியது.

ஊழல் தடுப்பு ஆணையம் கூறுகையில், சரவாக், கூச்சிங்கில் அமைந்துள்ள நான்கு நட்சத்திர தங்கும் விடுதியை சந்தைக்கு அதிகமான விலையில் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தகவலின் படி, பெல்டா கோப்ரேஷன் நிறுவனம் லண்டனில் 2013-இல் இருந்து 2015-வரை வாங்கிய தங்கும் விடுதிகளை விசாரணை நடத்திய போது சரவாக்கிலும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

SPRM

 

 

 

 

 

”   ஆரம்பகட்ட விசாரணையில், அதிகாரிகள் தங்கும் விடுதிகளை வாங்கியதால் பெல்டா கோப்ரேஷன் நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. விசாரணை அதிகாரிகள், கிடைத்த தகவல்களை ஆராய்ந்து வருகிறார்கள். அடுத்து பெல்டா கோப்ரேஷன் நிறுவனத்தின் பல அலுவலகங்களுக்கு சென்று தங்கும் விடுதிகளை வாங்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட உள்ளது,” என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை பிரிவு இயக்குனர், டத்தோ சிமி அப்துல் கானி தங்கும் விடுதிகளை வாங்கியதாக கூறப்படும் ஆவணங்களையும் மற்றும் தகவல்களையும் பெறுவதற்கு முயற்சிகள் ஆரம்பித்து விட்டதாக உறுதிப் படுத்தினார்.

கடந்த வாரம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இரண்டு சொத்துடமை இடைத்தரகர்களை பெல்டா இன்வெஸ்ட்மெண்ட் கோப்ரேஷன் நிறுவனம் வாங்கியதாக கூறப்படும் தங்கும் விடுதியை சந்தை மதிப்புக்கு அதிகமாக விலை கொடுத்து வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :