NATIONAL

பயிற்சி பெறும் ஆசிரியர்களின் அலவன்ஸ் தொகையை மீட்கும் பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும்

ஷா ஆலம், ஜூலை 31:

பயிற்சி ஆசிரியர்கள் தங்களின் இளங்கலை பட்டப் படிப்பை , ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (ஐபிஜி) மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசாங்கம் அவர்கள் பெற்று கொண்டிருக்கும் அலவன்ஸ் தொகை மீட்டுக் கொள்ளும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கல்வி, மனித வள மேம்பாடு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். அம்னோ தேசிய முன்னணி நிர்வாகம் தொடர்ந்து கல்வித் துறையை புறக்கணித்து வருகிறது. பல்கலைக் கழக பட்ஜெட்டில் குறைப்பு, பள்ளிகளின் ஒதுக்கீடு குறைப்பு மற்றும் ஆசிரியர்களின் அலவன்ஸ் போன்ற பல்வேறு கல்வி சம்பந்தப்பட்ட உதவித் தொகைகளை குறைத்துக் கொண்டே போவது கண்கூடாக பார்க்க முடிகிறது.

தற்போதைய அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தை காட்டிலும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி பரிந்துரை செய்துள்ள ஆசிரியர்களின் புதிய சம்பள உயர்வு தரம் வாய்ந்த கல்வியை அமல்படுத்த வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.

 

nik-nazmi

 

 

 

 

 

சில மாதங்களுக்கு முன்பு, நாட்டின் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹாமிடி நாட்டின் கல்வித் திட்டம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரின் கூற்றை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீனும் ஆமோதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

”  இதுதான் அவர்கள் கூறிய மறுமலர்ச்சியா? அப்படி என்றால் ஆசிரியர்கள் முக்கியமானவர்கள் இல்லையா? எதிர் கால சந்ததியினரை உருவாக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை மதிப்பளிக்கும் வகையில் அவர்களின் வருமானம் அமைய வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார். கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரான நிக் நஸ்மி நிக் அமாட், ஆசிரியர்களின் பங்களிப்பை புறக்கணித்தால் கல்வி மறுமலர்ச்சி தோல்வி அடைந்து விடும் என்றார்.

guru

 

 

 

 

கடந்த ஜூலை 15-இல் மத்திய அரசாங்கம் பயிற்சி ஆசிரியர்களுக்கான அன்றாட தேவைக்கான அலவன்ஸ் ரிம 430 மற்றும் பயணத்திற்கான அலவன்ஸ் ரிம 500 போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :