NATIONAL

அஸ்மின்: கட்சியை பிரதிநிதித்தே பாஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை, தனிப்பட்ட முறையில் அல்ல!!!

செப்பாங், ஆகஸ்ட் 26:

டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, தாம் பாஸ் கட்சியுடன் நடத்திய பேச்சு வார்த்தை, கெஅடிலான் கட்சியை பிரதிநிதித்தே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல என்று தெளிவுபடுத்தினார். கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி, கெஅடிலான் எடுத்த முடிவின் அடிப்படையில் தாம் 14-வது பொதுத் தேர்தலில் ஓரணியில் திரள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டதாக தெரிவித்தார்.

”  இது என் சுய முயற்சி அல்ல மாறாக கெஅடிலான் கட்சியின் முடிவின்படி பேச்சு வார்த்தை நடத்தினேன். நான் கெஅடிலான் கட்சியை பிரதிநிதித்து செயல் பட்டேன். இதற்கு முன்பு, கெஅடிலான் மற்றும் பாஸ் கட்சிக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தைகள் அதிகாரப்பூர்வமானது அல்ல என்று ஏற்கெனவே அறிவித்து விட்டேன்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

MB

 

 

 

 

 

அஸ்மின் அலி தனது குழுவினருடன் ஜூரீச், சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது இவ்வாறு கூறினார்.

BANGUNAN SUK

 

 

 

 

 

 

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின் அலி மேற்கண்ட பேச்சு வார்த்தைகள் பாஸ் மற்றும் கெஅடிலான் கட்சிகள் இடையே மட்டுமே தவிர பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை சம்பந்தப்படுத்தவில்லை என்று விவரித்தார்.

”   பாஸ் மற்றும் கெஅடிலான் கட்சிகள் இடையே இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தைகள் தொடங்கவில்லை. கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் மற்றும் பாஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையே நடந்தது சாதாரண சந்திப்பு மட்டுமே,” என்று தெளிவாக கூறினார்.

இதனிடையே, சிலாங்கூர் பாஸ் கட்சியின் தலைவர் சலேயின் மூகியி தனது கட்சி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 சட்ட மன்றங்களில் 42 போட்டியிடும் என்ற அறிக்கையை தொட்டு கேட்கப் பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், ஒரு தீர்க்கமான முடிவு ஏற்பட எல்லோரும் கலந்து பேச வேண்டும் என்றார்.

”   இது மிக சாதாரணமானது. எந்த கட்சிக்கும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் போட்டியிடும் உரிமை உண்டு. ஆனாலும் பேச்சு வார்த்தைகள் மூலம் இதை தீர்த்துக் கொள்ள முடியும். நாம் அம்னோ தேசிய முன்னணியை தவிர வேறு யாருடனும் பேச தயாராக இருக்கிறோம்,” என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :