NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் வெற்றி பெற்றால் தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்படும்

ஷா ஆலம், செப்டம்பர் 7:

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் சிறு மாற்றம் செய்து தேர்தல் நேர்மையான மற்றும் நீதியான முறையில் நடத்தப்படும் என்று பேராசிரியர் முனைவர் ஷாருடீன் படாரூடீன் கூறினார். 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் எந்த ஒரு பிரச்சனை இன்றி போட்டியிடலாம்.

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) முதலில் பிரதமர் துறை அமைச்சில் விடுபட்டு மேன்மை தங்கிய மாமன்னரின் கீழ் இயங்க அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் பட வேண்டும்.

”   தற்போது தேர்தல் நடத்தும் தேதி புரியாத புதிராக உள்ளது. நாட்டின் பிரதமர் நல்ல நேரம் பார்த்து கொண்டு இருக்கிறார். அவருக்கு சாதகமாக அமையும் நேரத்தில் தேர்தலை நடத்துவது மலேசியாவில் நடைமுறையாக இருந்து வருகிறது. தேர்தல் நடத்த பிரதமர் நாடாளுமன்றத்தை கலைக்க மாமன்னரின் அனுமதியை பெற வேண்டும். அதன் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் நாளை முடிவு செய்யும். ஆனால் மலேசியாவில் தேர்தல் ஆணையம் பிரதமர் துறை அமைச்சின் கீழ் உள்ளது. இரண்டாவதாக, நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மாமன்னர் முடிவு எடுக்க முடியும். ஆகவே, இதன் மூலம் பிரதமருக்கு மித மிஞ்சிய அதிகாரம் உண்டு. தேர்தல் தேதியை முடிவு செய்யும் முழு அதிகாரம் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கை பொருத்தது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

Prof_Dr_Shaharuddin_Badaruddin

 

 

 

 

 

டாரூல் எசான் கல்லூரியின் இயக்குனரான ஷாருடீன், நாட்டின் தலைவரான மேன்மை தங்கிய மாமன்னர் நாடாளுமன்றத்தை கலைக்கவும் மற்றும் தேர்தல் தேதியை நிர்ணயம் செய்யவும் அதிகாரத்தை கொண்டு இருக்க வேண்டும். இதில் பிரதமரின் ஆலோசனை இருக்கக்கூடாது என்றார்.

மேலும் விவரிக்கையில், மாமன்னருக்கு ஆலோசனை வழங்க மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் உள்ளது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுக்கும் உரிமை அதற்கு உண்டு என்றார்.

ஆனாலும், அரசியலமைப்பு சட்டத்தில் விதியை மாற்றம் ஏற்படுத்தும் போது மாமன்னர் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரத்தை சரிசமமாக இருக்க உறுதி படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாட்டில் ஜனநாயகம் சரியான முறையில் அமல்படுத்தப் பட்டால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் பட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நாடாளுமன்ற கலைப்பு மற்றும் வாக்களிக்கும் நாளை முன்னதாகவே அறிவித்து விடலாம் என்று கூறினார்.

undi

 

 

 

 

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். ஐந்து ஆண்டுகள் சரியாக முடியும் நாளில் தேர்தல் முடிவு செய்யும் நடைமுறை ஜனநாயக மரபை மதிக்கும் செயல்பாடுகளை காட்டுகிறது. ஆக அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகும் நிலை ஏற்படுகிறது. இதுவே மேம்பாடு அடைந்த நாடுகளில் அமலில் உள்ள நடைமுறை ஆகும். ஜனநாயக சித்தாந்தத்தை பின்பற்றி வரும் மலேசியா திருநாட்டில் இது அமுல்படுத்துவதில் எந்த நிலையிலும் சிக்கல்கள் வராது என்று கூறினால் அது மிகையாகாது.

தமிழாக்கம்

கு. குணசேகரன் குப்பன்


Pengarang :