SELANGOR

பாஸ் தொடர்ந்து சிலாங்கூர் அரசுடன் கைகோர்க்கும் – மூத்த ஆட்சிகுழு உறுப்பினர் தகவல்

ஷா ஆலாம்,19 செப்:

அம்னோ தொடர்ந்து பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க முற்பட்டாலும் நாங்கள் தொடர்ந்து சிலாங்கூர் அரசாங்கத்துடன் தொடர்ந்து கைகோர்த்திருப்போம் என மூத்த ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டார் அப்துல் சமாட் குறிப்பிட்டார். நாங்கள் (பாஸ்) தொடர்ந்து சிலாங்கூர் மாநில வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதல் பயணிப்பதாகவும் கூறினார்.
நடப்பில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் நன் நிலையில் செயல்பட்டு வரும் நிலையில் அம்னோவின் எண்நம் ஈடேறாது என்றும் கூறிய அவர் மக்களுக்கான நன் அரசாங்கமாகவும் நன் திட்டங்களையும் மாநில அரசு முன்னெடுத்து வரும் வேளையில் பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அம்னோ இழுப்பது என்பது வெறும் பகல் கனவுதான் என்றார்.

இதற்கிடையில்,டான்ஸ்ரீ முகமட் தாய்ப் அம்னோவில் இணையும் போது அவரோடு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களோடு கெ அடிலான் மற்றும் சுயட்சை சட்டமன்ற உறுப்பினர்களும் அம்னோவுடன் கைகோர்ப்பார்கள் என சொல்லப்பட்ட நிலையில் அஃது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார்.
பேராக்கில் ஆட்சியை கவிழ்த்ததை போல அம்னோ சிலாங்கூரிலும் செய்ய முயல்வது வேடிக்கையானது.

அது நிறைவேறாமல் போனது நஜிப்பிற்கும் சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் டான்ஸ்ரீ நோர் ஓமார்க்கும் பெரும் ஏமாற்றம் என்றும் வர்ணித்தார். அதேவேளையில்,
பாஸ் கட்சி சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பதோடு மக்களுக்கான நன் திட்டங்களில் அது கவனம் செலுத்தும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

#ரௌத்திரன்


Pengarang :