ANTARABANGSA

1எம்டிபி சர்ச்சையில் மீண்டும் ஒரு திருப்பம்

அனைத்துலகச் செய்தி,அக்டோபர் 4:

1எம்டிபி ஊழல்  தொடர்புடைய , கோல்ட்மேன் சாச்ஸ் வங்கியின்
முன்னாள் பணியாளர் டிம் லீஸ்னர்  அமெரிக்கா  நிதி பாதுகாப்பு தொழில்
துறையில் ஈடுபடுவதிலிருந்து  தடை விதிக்கப்பட்டுள்ளார். முன்னர் சிங்கப்பூரில் பணிபுரிந்த டிம் லீஸ்னர், நிதி தொழில்துறை கட்டுப்பாடு  ஆணையத்தின்( Finra) அதிகாரிகளால் கடந்த செப்டம்பர் 11-இல் தடைவிதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் ஏஜென்சி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கை   தெரிவித்தது.

2016ன் ஆரம்பத்தில், கோல்ட்மேன் சாக்ஸை விட்டு வெளியேறியதற்கான
தொடர்புடைய தகவல்களை அவர் சமர்ப்பிக்கத்  தவறியதால்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் வங்கித்  தலைவராக  டிம் லீஸ்னர் பொறுப்பு வகித்தார். பல பில்லியன் டாலர்கள் இழப்புத் தொடர்பில், அமெரிக்காவின் நீதி (DOJ) துறை விசாரணையில் ஒரு முக்கியமான நபர் என அழைக்கப்படும் லோ
டேக் ஜாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிகாரமற்ற கடிதத்தை வெளியாக்கினார்.

1 எம்டிபி மற்றும் இந்தோனேஷியாவில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும்
பிறகு கடந்தாண்டு வங்கி பணியிலிருந்து வெளியேறியதற்காகவும்கோல்ட்மேன்
லீஸ்னரை பணியிலிருந்து நீக்கியது.

#சரவணன்


Pengarang :