SELANGOR

சிலாங்கூர் இந்திய தொழில் முனைவர் தன்னாளுமை திட்டம்

ஷா ஆலாம், அக்டோபர் 10:
மலேசிய இந்தியர்களின் பொருளாதார நிலயை உயர்த்த சிலாங்கூர் மந்திரி பெசார் மாண்புமிகு அஸ்மின் அலி  சிலாங்கூர்  தொழில் முனைவர் தன்னாளுமை திட்டத்தின் கீழ் ரிம ஒரு மில்லியன் வழங்கியுள்ளார்.   இதன் முக்கிய நோக்கம்  B40 ரக மலேசிய இந்தியர்களை திறன் ரீதியிலான இலவச பயிர்சிகளை வழங்கி சிரு வியாபரம் தொடங்க “ஹிஜ்ராஹ் சிலாங்கூர்” கடனுதவி வழங்கும் ஒரு முயற்சியாகும். இதன் வழி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெரும் இந்தியர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரும் சிரு வியாபாரம் செய்து பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.          இதன் முதல் கட்ட திட்டம் கடந்த செப்டம்பர் 2017 வெற்றிகரமாக தொடங்கப் பட்டது.
கை தேர்ந்த பூ கட்டுதல்/பின்னுதல், புகைப்படம் எடுத்தல், அனிச்சல்/ கேக், ரொட்டி/பிஸ்கட் செய்யுதல், கிராபிக் டிசாய்ன், பாராம்பரிய பலகாரங்கள், தையல், இமிடேசன் நகைகள் செய்தல் போன்ற பயிற்சிகள் பண்டாமாரான், பெலாபுவான் கெலாங், கின்றார, ஸ்ரீ முடா, ஸ்ரீ அண்டாலாஸ், செமந்தெ,  பூச்சோங் போன்ற தொகுதிகளின் முதல் கட்ட திட்டமாக ஆரம்பிக்கப் பட்டள்ளன. இதில் இதுவரை மொத்தம் 240 இந்தியர்கள் பங்குபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் முன்முதல் நோக்கம் இந்தியர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருதார நிலையை வலுப்படுத்தவே ஆகும்.  வழங்கப் படும் திறன் சார்ந்த இலவச பயிற்சிகளின் கலந்துக் கொண்டு வியாபாரம் தொடங்க ஆர்வம் உள்ள பங்கேற்பாளர்களுக்கு வியாபரம் செய்ய சிலாங்கூர் கடனுதவி வழங்கவும் தயாராக உள்ளது. முதல் கட்ட கடனுதவி அடுத்த கட்ட கடனுதவி, வியாபாரம் பெருக்க கடனுதவி என பல்வேறு சலுகைகள் இந்த ஹிஜ்ராஹ் சிலாங்கூர் எனும் கடனுதவி திட்டத்தின் வாயிலாக பெற வாய்புகள் ஏற்படுத்த பட்டுள்ளன.
இந்த பயிற்சிகளின் வழி, பங்கேற்பாளர்களை வியாபாரம் தொடங்க ஊக்குவிக்க முடியும். அதுமட்டுமின்றி சுயகாலில் நின்று வியாப்பாரத்தை நடத்த வேண்டிய தொடர் பயிற்சிகள் மற்றும் கற்பித்தல்களும் ஏற்பாடு செய்யப்படும்.
 இந்த தொழில் முனைவர் தன்னாளுமை திட்டத்தின் வாயிலாக, சிலாங்கூர் அரசு மலேசிய இந்தியர்கள் குறிப்பாக B40 ரக இந்தியர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்த அக்கறை கொண்டு ள்ளதை தெளிவாகக் காட்டுகின்றது.
இரண்டாம் கட்ட திட்டம் நவம்பர் மாதத்தில் தையல் கலை,  கைப்பை,  கேக், இமிடேசன் நகைகள் மற்றும் பாரம்பரிய பதார்த்தங்களுடன் தொடங்கவுள்ளது.   அவை ரவாங், கோலா சிலாங்கூர், பத்து கேவ்ஸ், காஜாங் போன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ளன. மேலும் இந்தியர்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில் அரசு சார்பற்ற இயக்கங்களுடன் இணைந்து இன்னும் பல்வேறு வியாபார வாய்ப்புகள் உள்ள பயிற்சிகளை விரிவுபடுத்த சிலாங்கூர் அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது.  இதன் வழி, திறன் பயிற்சி, கடனுதவி, விளம்பர யுக்திக்கள்  மட்டுமின்றி, வியாபார சந்தை வாய்புகளை ஏற்படுத்தவும் சிலாங்கூர் அரசு முழு ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளது.. இந்த திட்டதின் வாயிலாக இவ்வாண்டு இறுதிக்குள் 500 இந்தியர்களுக்கு வியாபார பயிற்சிகளை வழங்க சிலாங்கூர் அரசு எண்ணம் கொண்டுள்ளது.

Pengarang :