NATIONAL

தமிழ்மொழி காக்கப்பட வேண்டும்

சீனர்கள் பல மொழி பேசும் பிரிவினர் இருந்தாலும், மெண்டரின் மொழியை , தேர்வு செய்து, பள்ளிகளில் அனைவரும் கற்பதுபோல், இந்தியர்களும் தமிழ்மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இன்று பலர் அதன் அடிப்படையிலேயே ஒன்றுபட்டு வாழ்ந்துவருகிறோம். அனைத்து இனங்களும் தமிழைப் பள்ளிகளில் கற்றுவருகிறோம், பாகுபாடின்றி. அம்மொழி அனைத்து துறைகளிலும் பயன்பாட்டில் உள்ளது, இந்தியர்களுக்கான அதிகாரப்பூர்வ மொழியாக ‘தாய்மொழி’ கல்வி என்று வரும்போது சிலர் மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதும் உண்மையே.

தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழியில் அறிவியல், கணிதம் கற்க வேண்டும் என ஒருமுறை நான் கூறியதற்கு,

” அப்போ தெலுங்கு, மலயாள பிள்ளங்க எப்படி?” என்று கேட்ட தோழர்களும் உள்ளனர். நான் இங்கு தாய்மொழி என்று குறிப்பிடுவது, அனைவரும் ஏற்றுக்கொண்டு, பள்ளியில் பெரும்பான்மையான பிள்ளைகள் படித்து வரும் தமிழ்மொழியை, அதற்காக நான் பிற தாய்மொழிகளை மதிக்கவில்லை என்று பொருளல்ல, அவைகளுக்கான பள்ளிகளில் இருப்பின், கட்டாயம் அப்பள்ளி மாணவர்கள் அம்மொழியிலேயே கற்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

சீனர்களுக்கு மெண்டரின் போல, இந்தியர்களுக்கு தமிழ், சீனர்களை மெண்டரின் இணைப்பது போல, தமிழர்கள் இந்தியர்கள் தமிழ் மொழியை இணைக்க வேண்டும்! ஊடக ஊமைகள் எழுத வேண்டும்!
வறட்சி தமிழ் துரோகம் வேண்டாம்.

பொன் ரங்கன் தமிழ் அறவாரியம் உ. தலைவர் / தமிழர் தேசியம்/ தமிழர் சங்கம்/ நாம் தமிழர்/ தமிழர் களம்/ தமிழர் குரல்/தமிழர் பாதுகாப்பு செயலகம்/ தனித்தமிழர் மொழி கல்வி மீட்சி இயக்கம். நன்றி மறவேல்!


Pengarang :