SELANGOR

சிலாங்கூர் பட்ஜெட் 2018: மத்திய அரசாங்கத்தை காட்டிலும் சிறந்தது

ஷா ஆலம், நவம்பர் 10:

டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அன்மையில் தாக்கல் செய்த சிலாங்கூர் மாநிலத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மத்திய அரசின் பட்ஜெட்டை காட்டிலும் நிறைவானதாகவும் முழுமையானதாகவும் உயிர்ப்பெற்றிருப்பதாக முதலீடு. தொழில்துறை மற்றும் வர்த்தகம், சிறுத்தொழில்,நடுத்தர தொழில் மற்றும் போக்குவரத்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கீம் வர்ணித்தார்.

மத்திய அரசின் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பட்ஜெட் மேம்பாடு,நிர்வாகம் உட்பட அனைத்து நிலையிலான மக்களின் வாழ்வாதார நலனும் மேம்பாடும் அதில் முழுமையாகவும் நிறைவாகவும் உள்ளடங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.அதேவேளையில்,சிலாங்கூர் மாநில அரசின் பட்ஜெட் மக்களுக்கான உன்னத பட்ஜெட் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

மேலும்,சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பட்ஜெட் மக்கள் மத்தியில் நன் வரவேற்ப்பினை பெற்றிருப்பதோடு இந்த பட்ஜெட் மூலம் மக்கள் பெரும் நன்மைகளையும் அடைவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை என்றும் கூறிய அவர் தொடர்ந்து மக்களுக்கான அரசாங்கமாக விளங்கிடும் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவும் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து சிலாங்கூர் மாநில மக்களின் வாழ்வாதரத்திற்கும் மாநில பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கும் மாநிலத்தை மேம்பாடும் வளர்ச்சியும் மிக்க அதீத நிலைக்கு உயர்த்தவும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே மாநில அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்பு என்றும் தேங் சாங் கீம் கூறினார்.
அதேவேளையில்,சிலாங்கூர் மாநிலம் ஏற்று நடத்திய அனைத்துலக நிலையிலான வர்த்தக மாநாடு மூலம் 9 மில்லியனையும் தகவல்தொழில்நுட்ப தொடர்பிலான முன்னெடுப்பின் மூலம் 6 மில்லியனையும் மாநில வருவாய் மேற்கோளாக ஈட்டத்தையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.மேலும்,ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையை விரிவுப்படுத்த 20 மில்லியனிலிருந்து 30 மில்லியனாக அதனை உயர்த்திருப்பதும் மிதிவண்டி வழியினை உருவாக்கியிருப்பதும் காலத்திற்கு ஏற்ற விவேகமான செயல்பாடுகள் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

இதற்கிடையில்,மாநில சபாநாயகர் ஹன்னா ஹியோ மேம்பாடு செயல்பாடுகள் மக்களுக்கும் பெரும் நன்மை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதோடு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் வெ.2000,000 ஒதுக்கியிருப்பது பல்வேறு மக்களின் பிரச்னைகளை களைவதற்கும் மக்களுக்கு இன்னும் கூடுதலான சேவைளையும் உதவிகளையும் வழங்கிட அஃது பெரிதும் பங்காற்றும் என்றும் கூறினார்.சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இந்த பட்ஜெட் விவேகமும் மக்களின் வாழ்வாதார சிந்தனையும் ஆழமாக கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

#வீரத் தமிழன்


Pengarang :