SELANGOR

சிலாங்கூர் மாநில அரசு தலைமையகத்தின் முன்பு நடந்த சீப்பீல்ட் ஆலய ஆர்பாட்டம்

சுபாங், டிசம்பர் 21:

நேற்று காலை சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமையகத்தில் முன்பு நடைபெற்ற சீப்பீல்ட் ஆலய ஆர்ப்பாட்டத்தில் ஆலய காபந்து (தாஸ் போஃர்ஸ்) குழுவினர் கலந்து கொண்ட செயலைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன். இந்த காபந்து குழுவை ஸ்ரீ ராமாஜி தலைமை ஏற்றுள்ளார். ஆனால் ஆர்ப்பாட்டத்தை மற்ற நபர்கள் அரசியல் நோக்கில் பயன்படுத்தி கொள்ள விட்டது தவறான செயல். மாநில அரசாங்கம் மற்றும் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியை தாக்கி பேசிய நடவடிக்கை குறித்து கண்டிக்கிறேன். அதிலும் மஇகாவினர் ஆர்ப்பாட்டத்தை தலைமை ஏற்றது மன்னிக்க முடியாதது.

கடந்த 18 டிசம்பர் நான் மற்றும்  கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோவுடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூன்று தரப்பினர் சீப்பீல்ட் ஆலய விவகாரம் தொடர்பாக பேசுகிறார்கள். அதிலும் ஆலய நிலம் ஏற்கெனவே தனியாருக்கு சொந்தமானது நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

சீப்பீல்ட் ஆலய விவகாரம் தொடர்பில் எல்லா தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளும் வரையில் நிரந்தர தீர்வு காண வாய்ப்பில்லை. திரு செல்லப்பா குழுவினர், திரு நாகராஜு குழுவினர் மற்றும் ஆலய காபந்து குழுவினர் அனைவரும் உண்மையான இந்துக்கள் தான். ஆக, அனைவரும் சுயநலம் இன்றி இந்துக்களின் நன்மைக்காக சிறந்த ஒரு தீர்வு காண வேண்டும்.

மாநில அரசாங்கம் ஒரு நீண்ட கால அடிப்படையிலான தீர்வு காண உதவி புரியும். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படுத்திய வார்த்தைகள் போன்ற அம்சங்கள் இந்த தீர்வுக்கு கண்டிப்பாக உதவாது.

சிவராசா ராசய்யா
சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர்


Pengarang :