NATIONAL

651,075 கடைகள் மீது சோதனை

நீலாய், ஏப்.18-

உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு (கேபிடிஎன்எச்இபி) நாடு முழுவதிலும் 651,075 வர்த்தக தளங்களில் கடந்த ஆண்டு சோதனை மேற்கொண்டதாக அதன் அமலாக்க பிரிவு இயக்குனர் டத்தோ இஸ்கந்தர் ஹாலிம் சுலைமான் தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையில் 10,265 நிறுவனங்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டதோடு பல்வேறு குற்றங்களுக்காக 27.36 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இதே கால கட்டத்தில் மொத்தம் 25,439 புகார்கள் பெறப்பட்டதாகவும் இவற்றின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் டத்தோ இஸ்கந்தர் கூறினார்.

இவ்வாண்டு இதுவரையில் மொத்தம் 183,043 கடைகள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு 4,086 கடைகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 28.86 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவலையும் அவர் வெளியிட்டார்.


Pengarang :