ANTARABANGSASAINS & INOVASISELANGOR

டிரோன் தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்க சிலாங்கூர் ஒப்பந்தம்

ஷா ஆலம், ஏப் 14- விவசாயத் துறையில் டிரோன் தொழில் நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதற்காக சிலாங்கூர் மாநில அரசு பிரசித்தி பெற்ற டிரோன் நிறுவனமான ஏரோடைன் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

சிலாங்கூர் தொழில்திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தினால் உருவாக்கப்படும் திறன் மையத்தின் (சி.ஒ.இ.) மாணவர்களுக்கு அந்த நிறுவனம் டிரோன் தொடர்பான பயிற்சிகளை வழங்கும் என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பயிற்சித் திட்டத்தின் வாயிலாக மனித வள மேம்பாட்டுத் துறையில் புதிய சகாப்தத்தை படைக்க முடியும்  என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

டிரோன் விமானிகளையும் மெக்கானிக்குகளையும் உருவாக்குவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பு உண்டாகும் என்பதோடு  தொழில் துறைகளில் குறிப்பாக விவசாயத்தில் அந்நிய மனித ஆற்றலை சார்ந்திருப்பதை குறைக்கவும் முடியும் என அவர் சொன்னார்.

மலேசியாவில் முதன் முறையாக உருவாக்கப்படும் இத்தகைய டிரோன் பயிற்சி மையத்தின் வாயிலாக விண்வெளித் துறையில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த முடியும் என்றும்  அவர் குறிப்பிட்டார்.

சைபர் ஜெயாவில் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கில் மந்திரி புசார் கலந்து கொண்டார்.


Pengarang :