MEDIA STATEMENT

மரம் விழுந்து மூதாட்டி மரணம்- பாலிங்கில் சம்பவம்

பாலிங், ஏப் 27- நேற்று மாலை இங்குள்ள  பூலாய்  குடியிருப்பு பகுதியில் மரம் விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

நேற்று மாலை சுமார் 3.00 மணியளவில் பெய்த பலத்தக் காற்றுடன்கூடிய   அடை மழையின்போது  இச்சம்பவம் நிகழ்ந்ததாக  பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சம்சுடின் மாமாட் கூறினார்.

இம்மாவட்டத்தின் பல பகுதிகளைத் தாக்கிய பலத்தக் காற்றுடன்கூடிய அடைமழை  மாலை 3.40  மணி வரை நீடித்ததாக  அவர் ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பூலாய் குபாங் தேசிய பள்ளிக்கு  எதிரே அமைந்துள்ள ஒரு வீட்டின் அருகே  மரம் விழுந்து மூதாட்டி ஒருவர் பலியானத் தகவலை குபாங் காவல் நிலையம் மாலை 3.45 மணியளவில் பெற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

மாலை 4.10 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றி மூதாட்டியை மீட்டனர்.  86 வயதான ரஃபியா ஜக்காரியா என்ற அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சுகாதார அமைச்சின் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர் என்று அவர் சொன்னார்.

இறந்த மூதாட்டியின் உடல் சவப் பரிசோதனைக்காக மாலை 4.40 மணியளவில் கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இச்சம்பவம்  திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்சுடின் கூறினார்.


Pengarang :