SELANGOR

பெட்டாலிங் ஜெயாவில் ஏர் ஆசியாவின் இலவச பேருந்து

ஷா ஆலம், டிசம்பர் 15:

ஏர் ஆசியா நிறுவனம் அடுத்தாண்டு முதல் பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் இலவச பேருந்து சேவையினை வழங்கிய முன் வந்துள்ளது. பிஜே ரேஞ்சர்ஸ் கால்பந்து குழுவினை பிரபலப்படுத்தும் புதிய முயற்சியாக அஃது இருக்கும் என்று ஏர் ஆசியாவின் தலைமை நிர்வாகி டான்ஸ்ரீ டாக்டர் டோனி பெர்ணண்டஸ் தெரிவித்தார்.

இத்திட்டம் அந்நிறுவனத்தின் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறிய அவர் பெட்டாலிங் ஜெயா முதல் கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையம் வரை இலவச பேருந்து சேவை தொடரும் என்றும் கூறினார்.
அதேவேளையில்,இத்திட்டத்தின் கீழ் பெட்டாலிங் ஜெயா வாழ் மக்கள் சிறந்த சேவையினை பெற முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்த டோனி இஃது பெட்டாலிங் ஜெயா வாழ் மக்களுக்கு பெரும் வாய்ப்பு என்றும் இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது அவர் தெரிவித்தார்.

இலவச பேருந்து சேவை குறித்து ஏர் ஆசியாவும் பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐந்தாண்டு கால ஒப்பந்தத்தில் பிஜே ரேஞ்சஸ் கால்பந்து அணியை பிரபலப்படுத்தும் அதேவேளையில் வெ.5 மில்லியன் லாபத்தையும் எட்டும் என்றார்.
மேலும்,பிஜே ரேஞ்சஸ் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ ஸ்டேடியமாக உருமாறும் எம்பிபிஜே அரங்கை சீரமைக்கும் பணிகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :