SELANGOR

எம்பிஐ இவவசமாக வழங்கிய பள்ளிச் சீருடைகளை பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்

கோம்பாக், டிசம்பர் 19:

சிலாங்கூர் மந்திரி பெசார் பெருநிறுவனம் (எம்பிஐ) வழங்கிய இலவச பள்ளிச் சீருடைகள் பெற்றுக்கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

தாமான் செலாயாங் (1) தேசிய பள்ளியில் பயிலும் கீர்த்தனா த/பெ நடராஜா, வயது 11 மாநில அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும் புதிய பள்ளி தொடங்கும் நாளை வரவேற்று காத்திருப்பதாக கூறினார்.

மேலும் பலர் பேசுகையில், பொருளாதார நெருக்கடி மற்றும் ஜிஎஸ்டி வரியினால் பொருட்கள் விலை ஏற்றம் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசாங்கத்தின் கீழ் எம்பிஐ உதவிக்கரம் நீட்டிய நடவடிக்கை கண்டு பெருமிதம் கொள்வதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மந்திரி பெசார் பெருநிறுவனம் (எம்பிஐ) நான்கு சட்ட மன்ற தொகுதிகளில் 1560 பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை விநியோகம் செய்துள்ளது. தனது சமுதாய சேவையை “பள்ளிக்கு செல்வோம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது என எம்பிஐ நிறுவனத்தின் சமூக நலன் மற்றும் தொழில்முறை தொடர்பு பிரிவு தலைவர் முகமட் ஜபாஃரூடின் முகமட் அலி கூறினார். புக்கிட் அந்தாராபங்சா, கோம்பாக் செத்தியா, பத்து கேவ்ஸ் மற்றும் உலு கிள்ளான் ஆகிய நான்கு சட்ட மன்ற தொகுதிகளில் விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ கோம்பாக் பெரிங்கீன் செலாயாங் நகராண்மை கழக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தை கோம்பாக் செத்தியா சட்ட மன்ற உறுப்பினர் ஹாஸ்புல்லா முகமட் ரிஸூவான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

#தமிழ் அரசன்


Pengarang :