NATIONAL

அரசியல் நிதி சட்ட மறுசீரமைப்பு ஆழமாக ஆய்வு செய்யப் பட வேண்டும்

ஷா ஆலம், டிசம்பர் 20:

பொது மக்களிடம் இருந்து பெறும் அரசியல் நிதி மசோதா ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகவும் மற்றும் நேர்மையான முறையிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைப்பூஃடின் அப்துல்லா கூறினார். அரசியல் கட்சிகளின் நிதிகளை தவறான முறையில் பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையில் பெரிய மாற்றம் மற்றும் புதுமையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

”   புதிய சட்ட மசோதா உருவாக்குவது மட்டுமில்லாமல், பண்பாடு, நன்னடத்தை, நடைமுறைகள் மற்றும்  செயல்பாடுகள்  போன்ற அம்சங்களை கொண்டிருக்க வேண்டும். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு மற்ற சட்ட மசோதாக்களும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் குறிப்பாக தேர்தல் சட்டங்கள் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்,” என்று விவரித்தார்.

 

 

 

 

 

சைப்பூஃடின் மேற்கண்டவாறு டாரூல் எசான் மையத்தில் நடைபெற்ற அரசியல் கட்சிகளுக்கான பொது மக்கள் நிதி தொடர்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் பேசினார்.

#வீரத் தமிழன்


Pengarang :