NATIONAL

கின்றாரா சட்டமன்ற வாக்காளர்கள் நோர் ஓமாரின் நாடாளுமன்றத்தை விட அதிகம்

ஷா  ஆலம், டிசம்பர் 2:

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எல்லை மறுசீரமைப்பினால் கின்றாரா சட்டமன்றத்தில் அதன் வாக்காளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ங் ஸ்ஷே ஹன் தெரிவித்தார்.

இந்த வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பால் நாட்டிலுள்ள தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய சட்டமன்ற தொகுதியாய் கின்றாரா விளங்குவதாகவும் கூறிய அவர் இஃது டான்ஸ்ரீ நோர் ஓமாரின் தஞ்சோங் காராங் நாடாளுமன்றத்தை காட்டிலும் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாய் விளங்குவதாகவும் கூறினார்.
எல்லை மறுசீரமைப்பிற்கு முன்னர் 35,000 வாக்காளர்களை கொண்ட இத்தொகுதி தற்போது 63,000 வாக்காளர்களை கொண்டிருப்பதாக கூறினார்.இந்த வாக்காளர் எண்ணிக்கை சிலாங்கூரில் நான்கு நாடாளுமன்றங்களை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்,இந்த புதிய எல்லை சீரமைப்பு வாக்காளர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய அவர் பூச்சோங் நாடாளுமன்றத்திலிருந்து சுபாங் நாடாளுமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதும் இதன் மூலக்காரணியமாகும் என்றார்.
கின்றாரா சட்டமன்றம் நடப்பில் பூச்சோங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்டது.ஆனால்,எல்லை சீரமைப்பின் அடிப்படையில் அஃது சுபாங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்டதாய் அமைகிறது என்றும் எடுத்துரைத்தார்.

கின்றாராவின் மேம்பாடுகள் பூச்சோங் சாலையின் 7வது மைல் தொடங்கி 14வது மைல் வரை நீடிக்கும் வேளையில் கின்றாராவை பூச்சோங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்டு வைப்பதே சிறப்பு என்றார்.
இதற்கிடையில்,கின்றாரா வாக்காளர் யாப் சீ மெங் (45 வயது) இந்த எல்லை சீரமைப்பின் மூலம் குழப்பங்கள் நீடிப்பது உண்மை என்றும் ஒப்புவித்தார்.

இந்த எல்லை சீரமைப்பு தொடரப்பட்டால் வாக்காளர்கள் தாங்கள் எங்கு வாக்களிக்கனும் என்பதை அறிந்துக் கொள்ள முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது தவிர்க்க முடியாது என்று மூன்று முறை இத்தொகுதியில் வாக்களித்திருக்கும் அவர் கூறினார்.

#வீரத் தமிழன்


Pengarang :