NATIONAL

துன் மகாதீர் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோவை வீழ்த்த கங்கணம்

ஷா ஆலம், ஜனவரி 7:

எதிர் வரும் 14-வது போதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்த கங்கணம் கொண்டுள்ளதாக பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். 22 ஆண்டுகளாக தாம் தலைமையேற்ற அம்னோவை வீழ்த்தி வெற்றி பெறுவேன் என்று சூளுரைத்தார். அம்னோவில் 1946-இல் இணைந்த துன் மகாதீர் தற்போது தனது நோக்கத்தில் இருந்து கட்சி தடம் மாறி விட்டது என்றும் தோற்கடிக்க நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.

”  நான் 1946-இல் இருந்து உறுப்பினராக இருந்தேன். அம்னோவின் தலைவராக 22 ஆண்டுகள் தடம் பதித்தேன். ஆனால், இன்று நான் அம்னோவை வீழ்த்த போராடுகிறேன். 60 ஆண்டுகளாக நேசித்த கட்சியை வீழ்த்துவது எளிதான காரியமல்ல. நான் நேசிக்கிறேனோ இல்லையோ, அது முக்கியமில்லை. நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்த துணிந்து விட்டேன்,” என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மாநாட்டில் தலைமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

 

 

 

 


Pengarang :