NATIONAL

கெமிரி தோட்ட புதிய தமிழ்ப் பள்ளி நிர்மானிப்பு கட்டுமானம் தரம் இல்லை !!!

சுங்கை சிப்புட், பிப்ரவரி 24:

கெமிரி தோட்ட புதிய தமிழ்ப் பள்ளி நிர்மானிப்பு கட்டுமானம் தரம் இல்லை என்றும் இடியும் அபாயம் உள்ளது என்று மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்க தலைவர் திரு. க. பாலகிருட்ணன் அம்பலப் படுத்தினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு பொதுதேர்தலுக்கு வாக்குறுதி அளித்து நான்கு வருட காலத்தாமதத்திற்கு பிறகு மஇகா தேசிய தலைவர் டத்தோ ஶ்ரீ சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் கல்வி துணை அமைச்சர் டத்தோ கமலநாதன் அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டுவரும் சுங்கை சிப்புட் கெமிரி தோட்ட புதிய தமிழ்ப் பள்ளியின் கட்டுமானம் சற்றும் தரமானதாக இல்லை என்று மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்க தலைவர் திரு. க. பாலகிருட்ணன் தெரிவித்தார்.

மூன்று மாடிக்கான அடித்தள (கோங்ரேட்) தூண் அமைக்கும் விதம் சற்றும் பாதுகாப்பானது அல்ல, அப்படி அமைத்தால் இக்கட்டிடம் இடியும் அபாயம் நேரலாம், (சிமின் பிரேக்) எனும் கற்கள் மூன்று மாடியை தாங்கி நிற்கும் சக்தி கிடையாது எனவும் 25 ஆண்டுகால கட்டிட பாதுகாப்புப் துறை அதிகாரியான திரு. க. பாலகிருட்ணன் விளக்கினார்.

அடிக்கல் நாட்டி சுமார் எட்டு மாதங்களாகியும் இன்னும் அடித்தள வேலையே நிறைவுபெறாத காலதாமதத்திற்கும் தரமில்லாத கட்டுமான அமைப்பு முறைக்கும் இக்கட்டுமான பொறியாளர், வடிவமைப்பாளர் மற்றும் குத்தகையாளர் அனைவரும் பொறுபுபேற்க வேண்டும் என்றார்.

அறிவித்த காலநேரத்தில் இத்தமிழ்ப் பள்ளியை கட்டிமுடிக்காத கால தாமதத்தையும் நாளை நமது பிள்ளைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பள்ளி மேலாளர் வாரியம் முழுகவனம் செலுத்தி தரமானப் பள்ளியாக குறித்த நேரத்தில் கட்டிமுடிக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்று சமூக சேவகரான திரு. பாலகிருட்ணன் கேட்டு கொண்டார்.

இது தொடர்பாக சில இலாகாவிற்கு கடிதம் வழங்க உள்ளதாகவும் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் நமது பிள்ளைகள் பாதுகாப்பு முன்னிறுத்தி வெளியிட்டுள்ள எனது அதிருப்தியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்க தலைவரும் பிரபல கட்டுமான பாதுகாப்பு துறை அதிகாரியுமான திரு. பாலகிருட்ணன் கருப்பையா பிள்ளை பதிவு செய்தார்.


Pengarang :