NATIONAL

அம்னோ ஒரு சட்ட விரோத அமைப்பு என்ற மனு இணையத்தில் ஆரம்பம் ?

ஷா ஆலாம், மார்ச் 3:

அம்னோ மீண்டும் அரசியலமைப்பு நெருக்கடியை எதிர் நோக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கட்சியின் தேர்தலை தள்ளி வைத்த நடவடிக்கை தொடர்பாக அம்னோ அதன் அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாகவும் அம்னோ ஒரு சட்ட விரோத அமைப்பு என்று அறிவிக்க நேரிடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இணையத்தில் ஆரம்பிக்கப்பட்ட மனுவில் சங்கப்பதிவதிகாரி, அம்னோ கட்சியின் 10.16 விதிமுறைப்படி கட்சித் தேர்தலின் திகதி 31 ஆகஸ்டு 2016 மற்றும் 19 அக்டோபர் 2016-க்குள் நடைபெற வேண்டும். ஆனால், இது 18 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு, 28 பிப்ரவரி 2018 மற்றும் 19 ஏப்ரல் 2018 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

”  அம்னோ கட்சியின் விதிமுறைகளின் படி தேர்தல் தொடர்ந்து தள்ளிவைக்க முடியாது. அம்னோ உச்ச மன்றமோ அல்லது சங்கப்பதிவதிகாரியோ தேர்தலை இதற்கு மேலும் தள்ளிவைக்க முடியாது. இதன் அடிப்படையில், மலேசியா முழுவதுமாக உள்ள அனைத்து அம்னோ கிளைகளும் 1 மார்ச் 2018 அன்று முற்றாக செயல் இழந்ததாக ஆகிவிடும். ஆகவே, 19 ஏப்ரல் 2018-இல் அனைத்து அம்னோ தொகுதிகளும் மற்றும் உச்ச மன்றமும் சட்ட விரோதமானதாகி விடும், ” என்று இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 


Pengarang :