SELANGOR

கணபதிராவ்: நிலம் & மானியம் கொடுத்து கோல்பில்ட் தமிழ்ப்பள்ளி கட்டப்பட்டுக் கொண்டிருகிறது….

ஷா ஆலாம், மார்ச் 12:

நிலமும் மானியமும் கொடுத்து கோல்பில்ட் தமிழ்ப்பள்ளி கட்டப்பட்டுக் கொண்டிருகிறது, அதே நேரத்தில் இந்தியர்களுக்கு என்று ஓர் இடைநிலைப்பள்ளிக்கான 8 ஏக்கர் நிலமும் மாநில அரசு பெட்டாலிங் ஜேயாவில் ஒதுக்கியும் தந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.

சுங்கை ரம்பாய் தமிழ்ப்பள்ளி 6 கிலோ மீட்டர் செம்மன் சாலையை தாண்டி படிக்கச் செல்ல வேண்டும். அதனை கருத்தில் கொண்டு மாநில அரசு பிரதான சாலை அருகிலேயே நிலைத்தை ஒதுக்கி கொடுத்தும் இன்னும் மத்திய அரசு அங்கு பல வருடம் ஆகியும் தமிழ்ப்பள்ளியை கட்டாதது வருத்ததை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளிக்கு 3.9 ஏக்கர் நிலமும் 4 மில்லியன் பணமும் திறந்த டென்டர் மூலமாக பொதுப்பணித்துறைக்க்கு  குத்தகையை மாநில அரசு வழங்கியும் உள்ளது. நிலை இப்படி இருக்க ஏன் திடீர் என்று புனிதன் போன்றவர்கள் ஈஜோக் சட்டமன்ற இருக்கையின் மேல் உள்ள ஆசையால், தமிழ்ப்பள்ளியை வைத்து அரசியல் செய்கிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆயிரம் மாணவர்கள் படிக்கும் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி,முன்பு இஸ்லாமிய அறவாரியதின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது, 2008 ல் ஆட்சி மாற்றம் வரவில்லை என்றால் இன்று சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியே இருந்திருக்காது. ஆனால் மாநில அரசு அந்த நிலத்தை பள்ளி வாரியதின் பெயருக்கே மாற்றி பட்டாவையும் கொடுத்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கோல்ப்பீல்ட் தமிழ்ப்பள்ளியை மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி போல் பிரமாண்டமாக கட்டவும் கூடவே மாணவர்கள் தங்கி படிக்கும் தங்கும் விடுதியும் கட்டவும் அன்றைய மாநில முதல்வர் டான் ஶ்ரீ காலிட்டும் ஆட்சி குழு உறுப்பினர் சேவியர் ஜெயகுமாரும் முயற்சியை மேற்கொண்டது உண்மை.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியை மாநில அரசு கட்டி விட்டதினால் பல இன்னல்களையும் பிரச்சனைகளையும் மத்திய அரசு மாநில அரசுக்கும் பள்ளி வாரியதிற்கும் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது, அதன் விளைவாகவே இன்றைய மாநில முதல்வர் அனைத்து விவகாரங்களையும் மத்திய அரசின் கீழ் செயல்ப்படும் பொது பணித் துறையிடமே டென்டர் மூலம் பொறுப்பை ஒப்படைத்தார்.
நிலமும் கொடுத்து பணமும் கொடுத்தாகி விட்டது, கட்டிட வரை படம் முதல் அனைத்து சான்றிதழ்களையும் ஒப்புதல்களையும் கல்வி அமைச்சிடம் இருந்தும் கல்வி இலாகாவில் இருந்தும் ஜெ.கே.ஆர்த்தான் பெற்றது. 89 மாணவர்கள் படிக்கும் அப்பள்ளியில் 6 வகுப்பறைகள் மட்டும் போதுமானது என்று சொன்னது மாநில அரசு அல்ல கல்வி இலாகாத்தான். அவர்களின் ஒப்புதலின் படியும் அவர்களின் அறிவுரையின் பெயரிலும்தான் ஜெ.கே.ஆர் அனைத்து திட்டங்களையும் கொன்டு வந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மலேசிய விதிபடி கல்வியும் மருத்துவமும் மத்திய அரசின் கீழ்த்தான் செயல்ப்பட வேண்டும் என்று ஒரு விதி இருக்கையில் நிலம்,பணம்,திட்டம் அனைத்தையும் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் மத்திய அரசும்,கல்வி அமைச்சும், ம.இ.காவினரும்த்தான் செய்ய வேண்டும் ஆனால் தன் கடமையை மறந்து விட்டு தெரியாது போல் இருப்பதினால்த்தான் மாநில அரசு அந்த கடமையை செய்ய முன் வருகிறது.

கோல்பீல்ட் விவகாரத்தில் புனிதன் போன்றவர்கள் ஜெ.கே.ஆர் மற்றும் மத்திய அரசை மட்டுமே கேள்வி கேட்க வேண்டுமே ஒழிய மாநில அரசை இல்லை.நான் ஓர் சவாலை விடுகின்றேன் மாநில அரசு கொடுத்துள்ள ஒரு பகுதியில்த்தான் ஜெ.கே.ஆர் பள்ளியை கட்டுகின்றனர்.  மிச்சம் நிலம் அதிகமாகவே உள்ளது முடிந்தால் பிரமாண்டமான இந்தியர்களுகான ஓர் மண்டபத்தை கட்டி கொடுங்கள் பார்க்கலாம்! என்றும் அவர் நேரடி சவால் ஒன்றினையும் விடுத்தார்.

அவரை தொடர்ந்து பேசிய மாநில கல்வி ஆட்சி குழு உறுப்பினர் நிக் அஜிபியின் சிறப்பு அதிகாரி எம்.யு.ராஜா கோல்பீல்ட் பள்ளியின் பள்ளி வாரியம் அன்று மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியை மிக குறைந்த செலவில் அதே நேரத்தில் மாநாட்டு மையத்துடன் கட்டிய குத்தகையாளரை வைத்து அப்பள்ளியை கட்ட முடிவை செய்ததை அடுத்து முதல் கட்ட வேலையாக அங்கு பைலிங் அடிக்கப்பட்டது. அந்த பைலிங் அடித்துக்கும் மாநில அரசுக்கும் துள்ளியும் சம்பந்தம் கிடையாது ஏன் ஒரு வெள்ளி பணத்தை கூட மாநில அரசு அதற்கு கொடுக்கவில்லை காரணம் கோல்பீல்ட் கட்டும் விவகாரம் திட்டமாகவேத்தான் இருந்ததே ஒழிய செயல் வடிவம் பெறவில்லை என்பதினை புனிதன் போன்றவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஹப்பிங்கம் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் 3 ஏக்கர் நிலம் ம.இ.காவிடம் தான் உள்ளதை அதனை முதலில் வாங்கி கொடுங்கள், அதை வாங்கித் தர முடியவில்லை மாநில அரசு கொடுத்த 3.9 ஏக்கர் நிலத்தை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்வது எதற்கு.39 தமிழ்ப்பள்ளிக்கு துத்தகை கொடுத்த விவகாரதில் ஓர் துணை அமைச்சரின் பெயர் அடிப்படுகிறதே அதற்கு சரியான பதிலைச் சொல்லாமல் பொது டென்டர் மூலம் பெறப்பட்ட ஓர் தமிழ்ப்பள்ளி கட்டுமானதின் மீது மண் வாரி இரைப்பது எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

#வேந்தன்


Pengarang :