NATIONAL

தொகுதி மறுசீரமைப்பு அறிக்கையை ஆய்வு செய்ய மறுக்கும் சபாநாயகரின் நடவடிக்கையை பாக்காத்தான் கேள்வி எழுப்பியது !!!

கோலா லம்பூர், மார்ச் 22:

தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு அறிக்கையை ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள்களை நிராகரிக்கும் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிக்கார் அமீன் மூலியாவின் நடவடிக்கையை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கேள்வி எழுப்பி உள்ளது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறுகையில், மார்ச் 28-இல் தாக்கல் செய்வதற்கு முன்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்கண்ட அறிக்கையை ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

”  மக்களவையில் இது ஒரு புதிய நடைமுறையாக உள்ளது. இதற்கு முன்பு இப்படி இல்லை. துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அமாட் ஜாயிட் ஹாமிடி தெரிவிக்கையில், தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை மக்களவையில் ஏற்றுக் கொண்ட பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றார். ஆகவே,  இந்த அறிக்கையை ஆய்வு செய்வதற்கு இதுவே சரியான தருணம்,” என்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.


Pengarang :