NATIONAL

எஸ்.பி.ஆர்.எம் உயர்தர தகுதியோடு செயல்பட வேண்டும்!!

ஷா ஆலாம்,மார்ச் 24:

மலேசிய லஞ்சம் ஊழல் தடுப்பு ஆணையம் அதன் செயல்பாட்டிலும் நடவடிக்கையிலும் உயர்தர தகுதியினை கடைபிடிக்க வேண்டும்.அவ்வாறு கடைபிடிக்கும் போது அவ்வாணையம் நேர்மையாகவும் எந்தவொரு தரப்பின் பக்கமும் இல்லாமல் நேர்த்தியாய் தனித்துவமாய் அது செயல்படுவதை உறுதி செய்யும்.

மந்திரி பெசார் அலுவலகத்தின் பொதுதொடர்பு வியூக நிர்வாகி ஹின் ஷாவ் லொங் ஊழல் மற்றும் லஞ்சம் செயல்பாட்டில் மலேசியா அனைத்துலக ரீதியில் 55வது இடத்திலிருந்து 62வது இடத்திற்கு உயர்ந்திருப்பது நாட்டின் லஞ்சம் ஊழல் தடுப்பு ஆணையம் மந்தநிலையை கொண்டிருப்பதை காட்டுகிறது என்றார்.

ஒரு தரப்பிற்காக செயல்படாமல் ஆக்கப்பூர்வமாகவும் நேர்மையாகவும் அதேவேளையில் சுதந்திரமாகவும் அஃது இயங்கும் போதுதான் அந்த ஆணையம் அதன் இலக்கையும் தனித்துவத்தையும் எட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும்,அவர்கள் பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகள் அல்லது தலைமைத்துவங்களுக்கு அடிபணியாமல் சுதந்திரமாய் செயல்படுவதே உயர்தர செயல்பாடும் வெளிப்படையான போக்கின் சான்றாகவும் அமையும் என்றார்.

தொடர்ந்து அவர்களின் போக்கு அரசியல் சார்ந்தும் இருத்தல் கூடாது.மலேசியா லஞ்சம் ஊழல் சூழலில் இருந்து விடுப்பட சுதந்திரமான ஆணையம் இருத்தல் அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார்.அதை விடுத்து அரசியல் நோக்கிற்காக செயல்பட்டால் நாட்டில் லஞ்சம் ஊழல் தொடர்கதைதான் என்றார்.

மக்களால் லஞ்சம் ஊழல் இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட சிலாங்கூர் பக்காதான் அரசாங்கம் நாட்டில் லஞ்சம் ஊழல் ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.

இதற்கிடையில் ஈஜோக்கில் தனியார் நிறுவனங்கள் சம்மதப்பட்ட நிலவிவகாரத்தில் மாநில அரசு துளியும் சம்மதப்படவில்லை என கூறிய அவர் பொய்யான தகவல்களை ஒரு தரப்பு பரப்பி வருவதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.


Pengarang :