SELANGOR

எல்லா சட்டங்களும் நல்ல எண்ணத்தில் இயற்றப் படுவதில்லை!!!

ஷா ஆலாம், ஏப்ரல் 1:

மலேசியாவில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் நல்ல நோக்கில் அல்ல, மாறாக அரசாங்கத்தின் நலனை பாதுகாக்கவே அமல்படுத்தப்பட்டு வருகிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இதில் சில சட்டங்கள் மலேசிய அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாகவும் அமைகிறது. குறிப்பாக, தேர்தல் எல்லை மறுசீரமைப்பு மற்றும் பொய் தகவல்கள் மசோதா ஆகியவை இதில் அடங்கும் என்று ஷா ஆலாம் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற  2018-ஆம் ஆண்டின் புத்தக கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

”  நாட்டு மக்களை ஒடுக்குமுறையில் கட்டுப்பாட்டில் வைக்க நிறைவேற்றப்பட்ட பொய் தகவல்கள் மசோதா இதில் வெற்றி அடையாது. மாறாக, முறையான கல்வி மற்றும் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு அரசாங்கமே சமூக வலைத் தளங்களில்  உலாவி வரும் பொய் தகவல்களை நிறுத்த முடியும். அறிவார்ந்த சமுதாயம் எந்த ஒரு தவறான தகவல்களையும் சீர்தூக்கி பார்க்க முடியும். சமீபத்தில் ஈஜோக் நிலக் குடியேறிகளின் பிரச்சினையை உத்துசான் திரித்து பிரசுரம் செய்து போது சிலாங்கூர் சட்ட மன்றத்தில் முறையான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இதன் மூலம்  பொது மக்கள் உண்மையை அறிந்து கொண்டு விட்டனர்,” என்று அஸ்மின் அலி கூறினார்.

கு.குணசேகரன்


Pengarang :