NATIONAL

ஜடிஇ: அஸ்மின் அலியை தோற்கடிக்க முடியாது!!!

ஷா ஆலம் , ஏப்ரல் 6:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியை அம்னோ தேசிய முன்னணி தோற்கடிக்க முடியாது என்று டாரூல் எசான் கல்லூரியில் நடைபெற்ற  ‘சிலாங்கூர் அரசியல் கண்ணோட்டம் 5.0’ என்ற அரசியல் ஆய்வரங்கத்தில்  மேற்கண்டவாறு அதன் துணைத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் ரிஸூவான் ஓத்மான் தெரிவித்தார். அஸ்மின் அலியின் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர் ) மாநில மக்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது என்றார்.

”  அஸ்மின் அலியின் தலைமைத்துவத்தின் கீழ் மாநில அரசாங்கம் சிறந்த அடைவு நிலையை எட்டியுள்ளது மாநில மக்களின் ஆதரவை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. அஸ்மின் அலியின் மீதான சிலாங்கூர் மாநில மக்களின் ஆதரவு 65% ஆக உள்ளது. இதற்கு முன்பு, இந்த ஆதரவு 62% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது,” என்று விவரித்தார்.


Pengarang :