NATIONAL

14-வது பொதுத் தேர்தல்: ஏமாற்று வேலைகள் இல்லை என்றால் பாக்காத்தான் வெற்றி பெறும்.

ஷா ஆலம் , ஏப்ரல் 6:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும். தேசிய முன்னணியின் ஏமாற்று வேலைகள் இல்லை என்றால் இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கெஅடிலான் கட்சியின் வியூக இயக்குனர் சிம் திஸி ஸின் கூறினார். மெர்டேக்கா சென்டர் மற்றும் இன்வோக் நடத்திய ஆய்வில், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளதை காட்டுகிறது என்று தெரிவித்தார்.

”  பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கெஅடிலான் கட்சியின் அவைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆகியோரின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கருத்து தெரிவித்தார்.


Pengarang :