NATIONAL

எஸ்பிஆர் நடுநிலையாக செயல்பட வேண்டும்; பிஎன்-க்கு ஆதரவாக அல்ல?

ஷா ஆலம், ஏப்ரல் 7:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்), பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே 14-வது பொதுத் தேர்தலில் கெஅடிலான் சின்னத்தை பயன்படுத்த முடியும் என்ற அறிவிப்பு நடுநிலையான போக்கை காட்டவில்லை என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் நூருல் ஈசா அன்வார் கூறினார். எஸ்பிஆரின் நடவடிக்கை அம்னோ தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்படுவதை உறுதி செய்கிறது என்றார். எஸ்பிஆரின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாசிம் அப்துல்லாவின் அறிக்கை ஒரு பொறுப்புள்ள மற்றும் நடுநிலையான ஆணையமாக செயல்பட்டு நேர்மையான தேர்தலை நடத்த முடியாது என்று தெரிகிறது என்று விவரித்தார்.

”  எஸ்பிஆரின் நடவடிக்கையில் குழப்பமான சூழல் காணப்படுகிறது. விளையாடும் திடல் சரிசமமாக இல்லை. இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால், தேர்தல் நடத்தவே தேவையில்லை. பிஎன் சின்னத்தில் போட்டியிடுங்கள்,” என்று தமது டிவிட்டரில் பதிவு செய்தார்.

 

 

 

 

 

 

 

 


Pengarang :