NATIONAL

நஜீப் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்பும் சட்டத்தை பின்பற்றாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்!!!

கோலா லம்பூர், ஏப்ரல் 8:

நாடாளுமன்றத்தை கலைத்த பின்பு தொடர்ந்து நாட்டின் சட்டத் திட்டங்களை மதிக்காமல் பல்வேறு வாக்குறுதிகளை தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கையை காபந்து அரசாங்கத்தின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் அறிவித்தார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில் காபந்து அரசின் பிரதமரான நஜீப் எந்த ஒரு வாக்குறுதிகள் வழங்க முடியாது என்றும் இது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய ஒரு செயலாகும் என்று வன்மையாக சாடினார்.

”  எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் வாக்குகளை கவர மிக அதிகமான அளவிலான உதவி நிதிகளை அறிவித்தார். இது ஒரு குற்றமாகும். நஜீப்பின் நடவடிக்கை பொதுத் தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யத் தயாராக உள்ளதைக் காட்டுகிறது. ஆனாலும் மலேசிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த தயாராக உள்ளனர்,” என்று கம்போங் அம்பாங் எம்பிஏஜே சந்தையின் திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.


Pengarang :