NATIONAL

14-வது பொதுத் தேர்தல்: அதிக வாக்காளர்கள் பதிவு, தேர்தல் மோசடிகளை முழுமையாக எதிர்கொள்ள முடியும்

சுங்கை பூலோ , ஏப்ரல் 9:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் பதிவு எண்ணிக்கை 90% ஆக உயர்ந்தால் தேர்தல் மோசடிகளை முழுமையாக எதிர்கொள்ள முடியும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தற்போது தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை என்ற போர்வையில் மோசடிகளை அம்னோ தேசிய முன்னணி செய்து வருகிறது என்றார்.

”  சிலாங்கூர் மாநில மக்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன், தேசிய முன்னணி மாநிலத்தை கைப்பற்ற எல்லா மோசடிகளை தயார் செய்து விட்டது. ஆகவே, நாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாக்காளர்கள் எண்ணிக்கை 90% ஆக உயர்ந்தால், தேசிய முன்னணியின் தேர்தல் மோசடிகளை எதிர்கொள்ள முடியும். அப்படி வாக்காளர்கள் எண்ணிக்கை பதிவு 50-இல் இருந்து 60 சதவீதமாக இருந்தால் மோசடிகள் வெற்றிகரமாக நடத்தி தேசிய முன்னணி வெற்றி பெற முடியும்,” என்று  அஸ்மின் அலி கூறினார்.


Pengarang :