NATIONAL

அம்னோவிற்கு ஓய்வு கொடுங்கள் – நாட்டின் வளம் மக்களுக்கு வழங்கப்படும்

ஷா ஆலாம், ஏப்ரல் 10:

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் நாட்டின் ஆட்சியை ஹராப்பான் கூட்டணி கைப்பற்றினால் அம்னோ குறித்தும் தேசிய முன்னணி குறித்தும் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்காமல் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் மக்கள் நலனில் தீவிர கவனம் செலுத்தும் என கோத்தா அங்ரிஃக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் யக்கோப் சப்ரிக் தெரிவித்தார்.

ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் நாட்டின் வளம் மக்களுக்கு பயன்படும் வகையில் திட்டம் வரையறைத்து அமல்படுத்துவோம் என்றும் கூறினார்.சிலாங்கூர் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட மக்கள் பரிவு நலத்திட்டங்கள் போல் தேசிய நிலையில் அதனை கொண்டு செல்வோம் என்றார்.

அரசாங்கத்தை வழி நடத்த நாங்கள் புதியவர்கள் அல்ல.சிலாங்கூர் மாநிலத்தில் நாங்கள் கொண்டிருக்கும் அனுபவமே போதுமானது.சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய போது அதன் கையிருப்பு வெறும் வெ.1.2 பில்லியன் மட்டுமே.ஆனால்,இன்று அஃது வெ.3.8 பில்லியன்.இதுவே எங்களின் நிர்வாகத்திறனுக்கு சான்று என்றார்.

மேலும்,மாநில கடனும் கிட்டதட்ட கட்டி முடிக்கும் தருவாயை எட்டியுள்ளது.நாங்கள் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் ஆட்சி செய்வோம் என்றும் கூறிய அவர் கல்வி கடனுதவியாக பிடிபிடிஎன் பெற்றவர்களின் சம்பளம் வெ.4000 எட்டும் வரை கடனை திரும்பி பெறவும் மாட்டோம் என நினைவுறுத்தினார்.

அதேவேளையில்,ஹராப்பான் கூட்டணி ஆட்சியில் மக்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடித்து வரும் ஜி.எஸ்.டி அகற்றப்படும் எனவும் குறிப்பிட்ட அவர் இனியும் அம்னோ வேண்டாம்.அம்னோவிற்கு ஓய்வு கொடுப்போம் என கூறினார்.

மேலும்,நாட்டின் கடனும் தற்போது வெ.40 பில்லியனாக இருக்கும் சூழலில் இன்னும் 20 ஆண்டுகளில் அவை வெ.800 பில்லியன் முதல் வெ.1 டிரிலியன் வரை எட்டலாம் என்றும் எச்சரித்தார்.

நாட்டின் நிதிநிலை தணிக்கை தலைமை அதிகாரி நாட்டில் வெ.27 பில்லியன் பணம் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் அவை பட்ஜெட்டில் 10 விழுகாடு என்றும் கூறியதையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

இக்கடனை யார் செலுத்துவது? நாட்டின் ஒவ்வொரு குழந்தை முதல் சாகும் வரையிலான ஒவ்வொருவரும் பல்வேறு வரிகள் மூலம் அவை திருப்பி செலுத்த வேண்டிய சூழல் இருப்பதாகவும் சுடிக்காண்பித்தார்.

இளம் தலைமுறையினர் பிடிபிடிஎன் கடனால் பெரும் சுமையை எதிர்நோக்குகிறார்கள்.படித்து முடித்து வேலை உத்தரவாதம் இல்லை.ஆனால்,கல்வி கடன் அவர்களை பெரும் அழுத்தத்திற்கு இட்டுச்செல்கிறது.

பிடிபிடிஎன் கடன் சிக்கலால் நிறைய இளம் தலைமுறையினர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு வீட்டு கடன் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள்.

இந்நிலை எல்லாம் மாறனும்.முடிவு மக்கள் கையில்.தொடர்ந்து கடன் தொல்லைகள் கழுத்தை நெறுக்க வேண்டுமா?அல்லது இந்த சிக்கல்களிலிருந்து விடுப்பட வேண்டுமா? முடிவு மக்கள் கையில் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


Pengarang :