NATIONAL

ஹராப்பான் கூட்டணியின் 100 நாளில் 10 வாக்குறுதிகள் சமூக ஊடகங்களில் பரவலானது

ஷா ஆலாம், ஏப்ரல் 10:

ஹராப்பான் கூட்டணி மத்திய அரசை கைப்பற்றினால் 100 நாளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனும் தேர்தல் கொள்கை அறிக்கை வீடியோ சமூக ஊடகங்களில் அதிக பரவலாய் பகிரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

புத்ராஜெயாவை கைப்பற்றினால் 100 நாளில் நிறைவேற்றப்படும் வாக்குறுதிகள் குறித்த அந்த வீடியோ இரண்டு நிமிடத்திற்கு ஒளியேற்றப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில்,பிடிபிடிஎன் கல்வி கடனுதவி பெற்றவர்களிடம் அவர்களின் சம்பளம் வெ.4000எட்டும் வரை வசூலிக்கப்படாது என்றும் கருப்பு பட்டியலிட்டவர்களின் பெயர்கள் அகற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்,குறைந்தபட்ச சம்பளம் மட்டும் ஊதியத்தை உயர்த்துவது குறித்த ஆய்வும் அதில் அடங்கும்.

தொடர்ந்து,1எம்டிபி,பெல்டா,மாரா மற்றும் தாபுங் ஹஜி ஆகியவை குறித்த விவகாரம் கடுமையான கவனிக்கப்படும்.அது குறித்த ஊழல்களை விசாரிக்க சுயட்சை விசாரணை குழு அமைத்தல் மற்றும் மீண்டும் அதன் உட்கட்டமைப்பை உருமாற்றம் செய்தல்.

மேலும்,பி40 வர்க்கத்தை சார்ந்தவர்களுக்கு
அடிப்படை மருத்துவ சிகிச்சைக்கு வெ.500 பெடுலி சிஹாட் மூலம் வழங்குதல் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.

பிடிபிடிஎன் கடன் சிக்கல் நீண்டக்காலமாகவே இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை நரகத்திற்கு இட்டுச் சென்றதாகவும் பத்து தொகுதி கெ அடிலான் இளைஞர் தலைவர் முகமாட் ரெஷ்சா ரலிப் கூறினார்.மேலும்,இளம் தலைமுறையை இந்நிலையில் இருந்து மீட்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பிடிபிடிஎன் கடன் பிரச்னைக்கு நன் தீர்வு மற்றும் ஜி.எஸ்.டி அகற்றம் இதுவே இளம் தலைமுறையின் பெரும் எதிர்பார்ப்பாகவும் விளங்குவதாகவுக் அவர் மேலும் கூறினார்.

ஹராப்பான் கூட்டணியின் இந்த தேர்தல் கொள்கை அறிக்கையும் வாக்குறுதிகளும் இளம் தலைமுறையின் பெரும் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருப்பதாகவும் கூறினார்.

இது குறித்த மேல் விபரங்களுக்கு பொது மக்கள் www.Facebook.com/ keadilanrakyat/. எனும் முகநூல் பக்கத்தையும் நாடலாம்.


Pengarang :