NATIONAL

பிஎன் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருக்க எஸ்பிஆரை கருவியாக பயன் படுத்துகிறது?

ஷா ஆலாம், ஏப்ரல் 10:

அம்னோ தேசிய முன்னணி தொடர்ந்து தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மலேசிய தேர்தல் ஆணையத்தை கருவியாக பயன் படுத்துகிறது என்று செகிஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர் எங் சுவி லிம் சாடினார். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணி வெற்றி பெற தேர்தல் ஆணையத்தை தங்களின் கைப்பாவையாக ஆட்டி வைக்கிறது என்று தெரிவித்தார்.

எதிர் வரும் மே 9-இல் 14-வது பொதுத் தேர்தலை நடத்தப்படும் என்ற அறிவிப்பில் இது தெரிய வந்துள்ளது. புதன்கிழமை ஆதலால் , தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர்களின் சதவீதம் மிகக் குறைவாகவே இருக்கும் என்றும் வேலை நாட்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து ஓட்டுப் போடுவது சிரமமான காரியமாக இருக்கும் என்று விவரித்தார்.

 

 

 

 

 

நஜீப் மற்றும் ரோஸ்மாவை காப்பாற்ற நடக்கும் நாடகமாக இது அமைகிறது என்று சுவி லிம் கூறினார். இதற்கு முன்பு எஸ்பிஆர் மே 9-ஆம் திகதியை 14-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் நாளாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை இன்று காலையில் மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாசிம் அப்துல்லா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.


Pengarang :