NATIONAL

வாழ்க்கை செலவினங்கள், இளையோரின் வாக்குகளை திசைதிருப்பும்?

ஷா ஆலாம், ஏப்ரல் 11:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் இளையோர் தற்போது எதிர் நோக்கி இருக்கும் வாழ்க்கை செலவினங்களை கருத்தில் கொண்டு நாட்டின் தலைமைத்துவத்தை மாற்றம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் அணி உச்ச மன்ற உறுப்பினர் அப்துல் ஹான்னான் கையிரி கூறினார். மே 9-இல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் இளைஞர்களின் அலை அலையாக திரண்டு வாக்களிப்பார்கள் என்பது திண்ணம் என்றார்.

”  இந்த முறை நடைபெறும் பொதுத் தேர்தல் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. இளைஞர்கள் திறன்மிக்கவர்கள் மற்றும்  சிறந்த ஒரு முடிவை எடுக்கும் திறன் கொண்டவர்கள். நாட்டை சிறந்த முறையில் நிர்வாகம் செய்யக் கூடிய தலைவர்கள், நேர்மையான , ஊழலில் சம்பந்தப் படாத மற்றும் சமூக நலன் கொண்டவர்களை தேர்ந்தெடுப்பார்கள்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு அவர்  தெரிவித்தார்.

 


Pengarang :