NATIONAL

அம்னோ-பிஎன் தொடர்ந்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது

ஷா ஆலம் , ஏப்ரல் 16:

அம்னோ தேசிய முன்னணி எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் தங்களை பிரபலமாக்க பள்ளிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது என்று பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். இவர்களின் செயல், அம்னோ தேசிய முன்னணி மிக இக்கட்டான நிலையில் இருப்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்தார். சட்ட மன்ற உறுப்பினரான தம்மை கூட பள்ளிகளில் அனுமதிப்பதில்லை என்றும் விவரித்தார்.

”  செக்சன் 24 பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் என்னை தொடர்பு கொண்டு ஏன் சிறந்த மாணவர்களின் பரிசளிப்பு  நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க வரவில்லை என்று வினவினார்கள்? மலேசிய நிர்வாகத்தில் நடக்கும் கோளாறுகள் இது. மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை தடுத்து நிறுத்தி அம்னோ தொகுதி தலைவர்களை வரவழைக்கப்பட்டு வருகிறது. இதனால் நாம் கண்டிப்பாக அம்னோ தேசிய முன்னணியை புறக்கணிக்க வேண்டும்,” என்று தமது அகப்பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.


Pengarang :