NATIONAL

அன்வார்: மலேசிய மக்கள் அம்னோ-பிஎன்னை புறக்கணிக்க வேண்டும்

ஷா ஆலம் , ஏப்ரல் 16:

மலேசிய மக்கள் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணியை புறக்கணித்து பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை தேர்ந்தெடுத்து நாட்டின் நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் தலைவிரித்து ஆடும் அரசாங்கத்தை நாம் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

” 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) ஊழலை ஐந்து உலக நாடுகள் விசாரணை நடத்தி வருகிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் பெயரை நேரிடையாக குறிப்பிடப்பட்டாலும் பொதுக்கணக்கு குழு (பிஏசி) மற்றும் நாடாளுமன்றம் அவரை களங்கமற்றவர் என்று அறிவித்து உள்ளது,” என்று தமது அறிக்கையில் அன்வார்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், பிரதமர் மற்றும்  நாட்டின் பெயரை அனைத்துலக செய்தி நிறுவனங்கள் அசிங்கப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. உலகிலேயே ராட்ஷ்ச ஊழலாக ‘தெ எகொனிமிஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அன்வார் தெரிவித்தார்.


Pengarang :