NATIONAL

ஏமாற்று வேலைகளை தவிர்க்க அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாக வேண்டும்!!

பெர்மாத்தாங் பாவ்,ஏப்23:

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஏமாற்றுகளை தவிர்க்க அதிகமான விழுகாடு வாக்குகள் பதிவாக வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்ட வேளையில் மே 9ஆம் தேதி அதிகமானோர் வாக்களிக்க வர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

அதிகமான விழுகாடு வாக்குகள் பதிவாகும் சூழலில் அம்னோ தேசிய முன்னணியால் எவ்வித ஏமாற்று செயலையும் மேற்கொள்ள முடியாது.குறைந்த வாக்குகள் பதிவாகும் நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் குறிப்பிட்ட சில ஏஜென்சி மூலம் முடிவுகளை மாற்றுவதற்கு தேசிய முன்னணி முற்படலாம் என்றும் கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நினைவுறுத்தினார்.

வாக்கு பதிவு 90 விழுகாட்டை எட்டினால் நமது வெற்றிக்கு அது வித்திடும் என்றும் கூறிய அவர் தேர்தல் ஆணையம் முடிவுகளை தாமதமாக அறிவித்தால் நாம் வென்றுவிட்டோம் என்பதை அது காட்டுவதாக குறிப்பிட்டார்.எனவே,அதிகமானோர் இம்முறை வாக்களிக்க முன் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இம்முறை நடைபெறும் பொதுத் தேர்தல் அம்னோ தேசிய முன்னணிக்கு பெரும் சவாலாக இருக்கும் சூழலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் எம்மாதிரியான போக்கையும் நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம்.அதனை முறியடிக்கும் ஆற்றலோடும் முழு விழிப்பு நிலையிலும் நாம் இருத்தல் வேண்டும் எனவும் கூறினார்.

அதேவேளையில்,தேர்தல் ஆணையல் சுதந்திரமாக செயல்படும் நிலையையும் நேர்மையான போக்கையும் கொண்டிருக்காத வேளையில் அம்னோ தேசிய முன்னணியின் வெற்றிக்கு அவர்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பெர்லிஸ் தொடங்கி ஜோகூர் வரையும் சபா மற்றும் சரவாக்கிலும் மக்கள் காட்டி வரும் ஆதரவும் நன் மதிப்பும் வரும் மே 9ஆம் தேதி அதிகமானோர் வாக்களிக்க முன் வருவார்கள் எனும் நம்பிக்கை எழுந்துள்ளதாகவும் அஸ்மின் அலி தெரிவித்தார்.

மேலும்,அம்னோ தேசிய முன்னணியை அகற்றுவதற்கும் நாட்டில் புதிய நம்பிக்கையை உயிர்பிக்கவும் வாக்களிக்கும் உரிமையை மக்கள் நன் முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Pengarang :