SELANGOR

மே 9இல் கேஎல்ஐஏவில் காத்திருப்பேன் – அஸ்மின் அலி

கிள்ளான்,மே02:

மே 9ஆம் தேதி தேர்தல் மையங்கள் மூடப்பட்டப் பின்னர் நான் கே.எல்.ஐ.ஏவில் காத்திருப்பேன் நஜிப்பும் அவரது துணைவியார் ரோஸ்மாவும் நாட்டை விட்டு ஓடிவிடாமல் இருப்பதை தடுக்க தாம் அவ்வாறு செய்யவிருப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகபட்சமானதாகவும் அநாவசியமானதாகவும் இருப்பதோடு மட்டுமின்றி நாட்டையும் திவால் நிலைக்கு நகர்த்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

சிலாங்கூரை தற்காப்பதோடு மட்டுமின்றி புத்ரா ஜெயாவையும் கைப்பற்றுவதற்கு மலேசியர்கள் மே 9இல் விவேகமாய் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.நாம் வெற்றி பெற வேண்டும் என்றார்.

சிலாங்கூர் மட்டுமில்லை நாடு முழுவதும் மக்கள் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த தயாராக வேண்டும்.நாம் ஒன்றுப்பட்டு தேசிய முன்னணியை வீழ்த்த வேண்டும் என்றார்.

இன்று நாட்டை படும்மோசமான நிலைக்கு கொண்டு சென்றதோடு பொருளாதார சூழலிலும் பெரும் வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற நஜிப் பெரும் அதிகபட்சமாக நடந்துக் கொண்ட காரணத்தால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடாமல் தடுப்பேன் என்றார்.

நாங்கள் தராசு சின்னத்தின் மீது வெறுப்புக் கொள்ளவில்லை.ஆனால்,நஜிப்பின் அதிகபட்சமான செயல்பாடுகளும் நாட்டின் சொத்தை கொள்ளையடிப்பதும் தான் நமக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

நஜிப்பும் ரோஸ்மாவும் ஐரோப்பா மற்றும் இந்தோனேசிய ஆகிய நாடுகளுக்கு அவர்கள் ஓடிவிடாமல் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்பட வேண்டும் என்றார்.

வெ.2.6 பில்லியன் விவகாரம்,ஊழல்,லஞ்சம் என தொடரும் இவர்களின் அட்டூழியங்களுக்கு நாட்டின் 14வது பொதுத் தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அஸ்மின் அலி கூறினார்.


Pengarang :