SELANGOR

நீதி & சேவையே சிலாங்கூர் அரசின் கொள்கைகளாகும் !!!

கிள்ளான்,மே02:

நீதி மற்றும் சிறந்த சேவை ஆகியவை சிலாங்கூர் அரசின் அடிப்படை கொள்கை என்று அதன் இலக்கிலிருந்து ஒருபோதும் நாம் தடமாறிட மாட்டோம் எனவும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் இன்றைய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமின்றி மக்களின் சிறந்த வாழ்வாதாரத்திற்கு இதுவே மூலதனம் என்றும் பெருமிதமாக கூறினார்.

மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் இதே அடிப்படைக் கொள்கையில் மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தை சிறந்த நிலைக்கு உயர்த்துவேன் என்றும் அஸ்மின் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நான் எனக்காகவும் என் மனைவிக்கும் உண்மையாக இருக்க மட்டேன்.மாறாய்,மக்களுக்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் தான் என்றார்.

மாநில அரசாங்கத்தின் மீதும் ஹராப்பான் கூட்டணி மீதும் நம்பிக்கை வையுங்கள்.நாம் புதியதொரு மலேசியாவை உருவாக்குவோம் என சுமார் 10,000 பேர் முன்னிலையில் அவர் இதனை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் மாநில அரசாங்கம் தொடர்ந்து பரிவு மிக்க திட்டங்களின் முன்னோடியாகவும் மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட அரசாகவும் விளங்கும் என்றார்.கடந்த 10 ஆண்டில் அதன் மூலம் சிலாங்கூர் வாழ் மக்களின் வாழ்வாதாரம் சிறந்த நிலையை எட்டியுள்ளது என்றார்.

தற்போது மாநில அரசு கையிருப்பு வெ.4 பில்லியன் இருப்பதாகவும் கூறிய அவர் ஜி.எஸ்.டி உட்பட மக்களுக்கு சுமையை கொடுக்கும் எதையும் சிலாங்கூர் அரசாங்கம் அமல்படுத்தாத நிலையிலும் நமது கையிருப்பு பெருமிதம் கொள்ளும் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.


Pengarang :