NATIONAL

போதும் தேசிய முன்னணியின் ஆட்சி ; ஓய்வு கொடுப்போம்!!

ஷா அலாம்,மே02:

60ஆண்டுகள் தேசிய முன்னணிக்கு போதும்.நாட்டின் 14வது பொதுத் தேர்தலோடு அவர்களுக்கு மக்கள் ஓய்வுக்கொடுக்க வேண்டும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி வேண்டுக்கோள் விடுத்தார்.

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் நாட்டை மிகவும் சிறப்பாகவும் மபெரும் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லும் புதிய அரசாங்கத்தை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.அதேவேளையில்,மக்களின் வாழ்வாதாரவும் நலனும் காக்கும் அரசாகவும் அது விளங்கிட வேண்டும்.அத்தகைய ஆற்றலும் நிர்வாகத் திறனும் ஹராப்பான் கூட்டணியிடமே இருப்பதாகவும் அவர் நினைவுறுத்தினார்.

மீண்டும் தேசிய முன்னணி தேர்வு செய்யப்பட்டால் அஃது நாட்டிற்கு பெரும் இழப்பாகி விடும் என நினைவுறுத்திய அஸ்மின் நாட்டை மீண்டும் இருண்ட காலத்தில் புதைத்து விடாதீர் என மக்களுக்கு நினைவுறுத்தினார்.

இதற்கிடையில்,நஜிப்பிற்கும் தேசிய முன்னணியினருக்கும் அஸ்மின் அலி “போதும் – போதும்” உங்களுடைய ஆட்சிக்கு மே 10 விடைகொடுக்கும் என்றும் எச்சரித்தார்.

மலேசியாவிற்கு இன்றைய சூழலில் தேவையான மக்கள் நலன் காக்கும் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் புதிய அரசாங்கமாய் ஹராப்பான் கூட்டணி விளங்கும் என்றும் அவர் கூறினார்.

அம்னோவுடன் கைகோர்த்து வஞ்சத்திலும் சூழ்ச்சியிலும் ஈடுப்பட்டிருக்கும் பாஸ் மீது எனக்கு வெறுப்பு இல்லை.ஆனால்,நாம் புதியதொரு அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார்.

மே 9ஆம் தேதி சிலாங்கூரை மட்டும் நாம் தற்காத்துக் கொள்ளும் நாள் அல்ல.மாறாய்,மத்திய அரசாங்கத்தையும் கைப்பற்றும் உன்னத வரலாற்று நாளாக அஃது உருவெடுக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையில் அஸ்மின் நினைவுறுத்தினார்.


Pengarang :