SELANGOR

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனது பணியை மீண்டும் தொடங்கினார்

ஷா ஆலம், மே 14:

கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மன்னர், மேன்மை தங்கிய சுல்தான் ஷாராஃபூடின் இட்ரிஸ் ஷா முன்பு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டப் பிறகு இன்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மீண்டும் தனது பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சுல்தான் சாலாஹூடின் அப்துல் ஹாஸிஸ் ஷா கட்டிடத்தின் 21-வது மாடியில் உள்ள தனது அலுவலகத்தில் காலை 7.48 மணிக்கு ‘பஞ் கார்ட்டை’ பதிவு செய்தார். மாநில செயலாளர் டத்தோ முகமட் அமீன் அமாட் யாஃயா, மாநில சட்ட ஆலோசகர் டத்தோ நிக் சுஹாய்மி நிக் சுலைமான் மற்றும் மாநில நிதி அதிகாரி டத்தோ நோர் அஸ்மி டிரோன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன் பிறகு அஸ்மின் அலி கட்டிடத்தின் கீழ் மாடியில் மாநில இலாகாகளின் தலைவர்களுடன் காலை உணவை அருந்தினார். அவர்களோடு உரையாற்றும் பொழுது மாநிலத்தின் நீர் நிறுவன மறுசீரமைப்பை முதலில் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.

 

 

 

 

 

”  சிலாங்கூர் மாநிலம், மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு மேலும் அதிகமான முதலீட்டாளர்களை கொண்டு வர வேண்டும். இதில் ‘இன்வெஸ்ட் சிலாங்கூர்’ தனது செயல்பாடுகள் மேலும் சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது,” என்று விவரித்தார்.

இதே வேளையில், பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர் ) தொடர்ந்து செயல்படுத்தப் படும் என்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பிரச்சாரத்திற்கு இதுவே ஊன்றுகோலாக இருந்தது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.

கு.குணசேகரன்


Pengarang :