NATIONAL

பிரதமர் கல்வி & மகளிர் அமைச்சர்களை அறிவித்தார் !!!

பெட்டாலிங் ஜெயா, மே 17:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தன்னை கல்வி அமைச்சராக அறிவித்தார். துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலை மகளிர், குடும்ப நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும் பெயரிட்டார்.

”  இந்த அமைச்சு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுகளை இணைத்து செயல்படும். தற்போது  இரண்டு அமைச்சுகளை இணைத்து ஒரு அமைச்சர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளது,” என்று யாயாசான் சிலாங்கூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

 

 

 

 

 

இதனிடையே, டாக்டர் மகாதீர் கூறுகையில், மேலும் 13 அமைச்சர்கள் எதிர் வரும் திங்கள்கிழமை (மே 21) இஸ்தானா நெகாராவில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்று விவரித்தார்.

” மற்ற அமைச்சுகள் இன்னும் முடிவு செய்யவில்லை ன. கூட்டணி கட்சிகளின் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,” என்று தெரிவித்தார்.


Pengarang :