NATIONAL

பிரதமர்: மேலும் 12 அமைச்சர்களின் பெயர்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்

ஷா ஆலம், மே 24:

மேலும் 12 அமைச்சர்களின் பெயர்கள் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இந்த எண்ணிக்கை சூழ்நிலைக்கு ஏற்ப அதிகரிக்கப் படலாம்.

”  கூடிய விரைவில் அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்,” என்று செய்தியாளர்களிடம் நேற்று  கூறினார்.

இதற்கு முன்பு 15 அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதில் கல்வி அமைச்சர், பொருளாதார நலன் அமைச்சர், கிராமப்புற மேம்பாடு அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் அடங்கும்.


Pengarang :