SELANGOR

ஜிஎஸ்டி அகற்றம், பொருட்களின் விலை ஏற்றமா?

கோம்பாக்,ஜூன்04:

நாட்டின் பொருள் சேவை வரியான ஜிஎஸ்டி அகற்றியதால் பொருட்களின் விலை ஏற்றம் காண்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவலை பொது மக்கள் நம்ப வேண்டாம் என பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.

அது ஒரு பொய்யான பரப்புரை எனவும் கூறிய அவர் ஜிஎஸ்டி அகற்றப்பட்ட பின்னர் பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் சுட்டிக்காண்பித்தார்.ஹராப்பான் அரசாங்கத்தின் மீது அவதூறு ஏற்படுத்தவே சில பொறுப்பற்றவர்கள் இவ்வாறு சமூக ஊடகங்களில் எழுதி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி அகற்றப்பட்டதால் வியபாரிகள் முறையாகவும் நேர்மையாகவும் நடந்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு அவர்கள் செயல்பட்டால் பொருட்களின் விலை ஒருபோதும் ஏற்றம் காணாது என்றும் கூறிய அவர் ஜூன் 1ஆம் தேதி முதல் நாட்டின் விற்பனைகள் சூடுபிடிக்க தொடங்கி விட்டதாகவும் உணவகங்களில் கூட மக்கள் வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொருட்களின் விலையை விருப்பம் போல் ஏற்றும் வியபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய அவர் தொடர்ந்து நுண்ணியமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நாட்டில் மக்களின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கும் அவர்களின் வாழ்வாதார சுமையை குறைக்கவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் அனைத்து தரப்பும் அரசுக்கு நன் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும்,முகநூல் உட்பட சமூக ஊடகங்களில் ஜிஎஸ்டி அகற்றப்பட்டதால் பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுவது கற்பனைக்கு எட்டாதது எனவும் கூறிய அஸ்மின் அலி அவர்கள் பதிவேற்றம் செய்யும் கட்டண ரசீதுகளும் ஜிஎஸ்டி காலக்கட்டதில் உள்ளவைகள் என்றும் விளக்கினார்.


Pengarang :